Naai Sekar Returns Audio Rights : நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆடியோ உரிமையை கைப்பற்றியது திங்க் மியூசிக் இந்தியா.. அசத்தும் வைகைப்புயல்
'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியது திங்க் மியூசிக் இந்தியா நிறுவனம். படத்தின் நான்கு பாடல்களையும் நடிகர் வடிவேலுவே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக, சிறந்த குணச்சித்திர நடிகராக திகழ்ந்த நடிகர் வைகை புயல் வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்ஸை 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் மூலம் ஆரம்பித்துவிட்டார். 2017ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான "மெர்சல்" திரைப்படத்திற்கு பிறகு சுமார் நான்கு ஆண்டு காலமாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகர் வடிவேலு மீண்டும் தனது ரீ என்ட்ரி மூலம் ரசிகர்களை முழுமையாக ஆக்கிரமிக்க தயாராகிவிட்டார்.
முழு நீள காமெடி திரைப்படம் :
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரமான நாய் சேகர் எனும் லீட் ரோலில் நடித்துள்ளார். இவரின் மகளாக விஜய் ஸ்டார் மற்றும் பாடகியான சிவாங்கி கிருஷ்ணகுமார் நடித்துள்ளார். மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது ஒரு காமெடி திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நடித்துள்ளதால் மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு உள்ளது.
Let's finish this year on a high note 🎺 #NaaiSekarReturns 🐶💯 Audio rights bagged by @thinkmusicindia 💿
— Lyca Productions (@LycaProductions) November 11, 2022
A @Music_Santhosh musical 🎶
Starring Vaigai Puyal #Vadivelu 🌪️
Directed by @Director_Suraaj 🎬
DOP @shuttervik 🎥
Editor @EditorSelva ✂️
Art @UmeshJKumar 🛠️ pic.twitter.com/C4vMJbdjbk
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஆடியோ உரிமை :
நடிகர் வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்துள்ள 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். இப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியுள்ளது திங்க் மியூசிக் இந்தியா நிறுவனம். இந்த சந்தோஷமான தகவலை தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம். நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்துடன் இந்த ஆண்டை சிறப்பாக முடித்துக் கொள்வோம் என குறிப்பிட்டுள்ளனர் படக்குழுவினர்.
#NaaiSekarReturns #Vadivelu ❤️ pic.twitter.com/c1WMpAAZ4a
— Third I Media (@thirdimedia) October 28, 2022
மிகவும் பிஸியான வடிவேலு :
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். அந்த நான்கு பாடல்களையும் நடிகர் வடிவேலுவே பாடி அசத்தியுள்ளாராம். இந்த கம் பேக் வடிவேலுவுக்கு சிறப்பான நடிகராக மட்டுமின்றி சிறப்பான பாடகராகவும் ஜொலிக்கப்போகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் வடிவேலு மாமன்னன், சந்திரமுகி 2 மற்றும் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

