Kantara : காந்தாரா பார்க்கக்கூடாது.. மிரட்டப்பட்ட இஸ்லாமிய ஜோடி.. என்னதான் நடக்கிறது?
காந்தாரா படத்தைப் பார்க்கக் கூடாது என்று முஸ்லீம் ஜோடிக்கு கர்நாடகாவில் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
காந்தாரா படத்தைப் பார்க்கக் கூடாது என்று முஸ்லீம் ஜோடிக்கு கர்நாடகாவில் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தக்ஷின கர்நாட்காவில் சூலியா எனும் இடத்தில் கேரளாவைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று படம் பார்க்க வந்துள்ளது. அவர்கள் இருவரும் கேவிஜி கல்வி நிலையத்தில் படிக்கின்றனர் எனத் தெரிகிறது. அந்தப் பெண் ஹிஜாப் அணிந்திருந்திருக்கிறார். இது குறித்து திரையரங்கு அருகில் இருந்த சிலர் முஸ்லிம் குழுக்களுக்கு தகவல் கொடுத்ததாகத் தெரிகிறது. இதனையடுத்டு அங்கு வந்த முஸ்லிம்கள் சிலர் அந்த ஜோடியை கடுமையாக மிரட்டியுள்ளனர். இதனையடுத்து இருவரும் அங்கிருந்து படம் பார்க்காமலேயே சென்றுள்ளனர். காந்தாரா திரைப்படம் இந்து கலாச்சாரத்தை போற்றுவதாலேயே அவர்கள் படம் பார்க்க விடாமல் தடுக்கப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சூலியா காவல் நிலைய துணை ஆணையர் திலீப் ராய் கூறும்போது, எங்களுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக தகவல் வந்தது. சம்பந்தப்பட்ட ஜோடி ஏதும் புகார் தெரிவிக்கவில்லை. ஆனால் நாங்கள் அவர்களை கண்டறிந்து புகார் கொடுக்கக் கூறினோம். அந்தப் புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து அவர்களின் படைப்பில் வெளியான திரைப்படம் 'காந்தாரா'. சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வரும் இப்படம் கன்னடத்தில் உருவானாலும் அதன் வெற்றியால் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்திலும் வெளியிடப்பட்டது.
View this post on Instagram
ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கியதோடு இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் அபாரமான நடிப்பு பாராட்டுகளை குவித்தது. பல பிரபலங்கள் நேரடியாகவும், சோசியல் மீடியா மூலமாகவும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'காந்தாரா' திரைப்படத்தை பாராட்டி ட்விட்டர் மூலம் " படத்தை எழுதி இயக்கி, நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டிக்கு ஹாட்ஸ் ஆஃப். இப்படிப்பட்ட தரமான படத்தை கொடுத்த படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகள்” என ட்வீட் செய்திருந்தார். நடிகர் ரிஷப் ஷெட்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தும் வாழ்த்துக்களை பெற்றார்.