மேலும் அறிய

Yuvan Shankar Raja: GOAT விசில் போடு பாடல் சொதப்பியதற்கு இதுதான் காரணமா? - யுவனின் பதிலை பாருங்க!

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் the greatest of all time படத்தில் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள the greatest of all time படத்தில் இடம்பெற்றுள்ள விசில் போடு கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. 

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் the greatest of all time படத்தில் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. GOAT என சுருக்கமாக அழைக்கப்படும் இப்படத்தில் இருந்து “விசில் போடு” என்ற முதல் பாடல் கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. மதன் கார்க்கி எழுதிய அந்த பாடலை விஜய் பாடியிருந்தார். இதன் வரிகள் எல்லாம் விஜய்யின் அரசியல் வருகையை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தது. 

இப்பாடல் தென்னிந்திய சினிமாவில் 24 மணி நேரத்தில் அதிக நபர்களால் பார்க்கப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றாலும், ஏதோ ஒன்று மிஸ் ஆவதாக ரசிகர்கள் தெரிவித்தனர். குறிப்பாக யுவனிடம் இருந்து இப்படி ஒரு இசையை எதிர்பார்க்கவே இல்லை என சொல்லும் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் ஒரு வீடியோவில் பேசிய யுவன் தனக்கு குத்துப்பாட்டுக்கு இசையமைப்பது பெரும் தலைவலி என தெரிவித்துள்ளார். 

View this post on Instagram
 
A post shared by kowsick.efx💜 (@kowsick._ks)

அந்த வீடியோவில், “இசையமைப்பதில் எனக்கு கடினமாக இருப்பது எது என்று கேட்டால் திடீரென இயக்குநர்கள் குத்துப்பாட்டு கேட்பது தான். நான் இன்னிக்கு செத்தேன் என நினைத்துக் கொள்வேன். ஏனென்றால் இசையில் நிறைய வகைகள் உள்ளது. ஆனால் குத்து பாடலில் யோசிக்க எதுவுமே கிடையாது. சந்தமே கொஞ்சம் தான் உள்ளது. அதுல யோசிக்கிறது என்பது ரொம்ப பெரிய தலைவலியான விஷயம்” என யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்திருப்பார். 

இதனைத் தொடர்ந்து அருகில் அமர்ந்திருக்கும் இயக்குநர் விஷ்ணுவர்தன், ‘எந்த இயக்குநராவது யுவனிடம் குத்து பாட்டு வேண்டும் என கேட்டால், யுவனின் எண்ணமெல்லாம் அந்த இயக்குநரை போட்டு குத்த வேண்டும் என்பது போல இருக்கும்’ என கிண்டலாக தெரிவித்திருப்பார். இந்த வீடியோவை பார்க்கும்போது யுவனுக்கு குத்துப்பாடல் என்றாலே அலர்ஜி தான் போல.. அதனால் தான் விசில் போடு பாடல் இப்படி இருக்கிறதா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

The Greatest of All Time

the greatest of all time படத்தில் மீனாட்சி சௌத்ரி, பிரஷாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, லைலா, விடிவி கணேஷ், பிரேம்ஜி அமரன், வைபவ், யோகிபாபு, அஜ்மல் அமீர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரமாண்டமான முறையில் இப்படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Embed widget