மேலும் அறிய
Advertisement
Yuvan Press Meet: விஜய் செய்த சர்ப்ரைஸ்... அப்பாவின் ரியாக்ஷன் இவ்வளவுதான்... - யுவன் பகிர்வுகளின் ஹைலைட்ஸ்
”இத்தனை ஆண்டுகள் கடந்தும் எனக்கு விருதுகளைவிட ரசிகர்களின் அன்பை முக்கியமானதாகவும், போதுமானதாகவும் கருதுகிறேன்” - யுவன்சங்கர் ராஜா
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திரை உலகில் அறிமுகமாகி நேற்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்த நீண்ட பயணத்தில், இசை ரசிகர்களை அள்ளி குவித்திருக்கும் யுவன், மக்களுக்கு பிடித்த இசையை தொடர்ந்து இசைத்து வருகிறார். நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், சுவாரஸ்யமான பதில்களை தந்தார். யுவன் பேசியதில் இருந்து ஹைலைட் பாயிண்ட்ஸ் இதோ!
- இந்த 25 ஆண்டுகள் வேகமாக சென்றுவிட்டது. இவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டதா என தோன்றுகிறது!
- இந்த பயணத்தில் துணை நின்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், என்னுடன் பணியாற்றிய இசை தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள்
- என் அம்மாவை மிஸ் செய்கிறேன். ஆனால், அந்த இடத்தை என் மனைவியும், என் மகளும் சரியாக பூர்த்தி செய்துவிட்டனர். அந்த வெற்றிடம் இப்போது இல்லை என நம்புகிறேன். இறைவனுக்கு நன்றி
- 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என அப்பாவிடம் சொன்னபோது, அவர் “ஓ அப்படியா” என கேட்டார்
- நடிப்பதில் ஆர்வமில்லை. இசை ஆல்பங்களில் அவ்வப்போது தோன்றுவேன். ஆனால், நடிக்கப்போவதில்லை
- இசையமைப்பதை தவிர்த்து, படங்கள் தயாரித்து வருகிறோம். அடுத்ததாக, ஒரு கதை எழுதி இருக்கிறேன். ஹீரோ இல்லை. பெண் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு கதை. விரைவில் இயக்க இருக்கிறேன். அது தொடர்பான அப்டேட்டை பிறகு சொல்கிறேன்
- பழைய யுவனை தேடிச் சென்றதில்லை. அடுத்து மாறும் தொழில்நுட்பத்தை பயன்படுத்து, எனது இசையை மேம்படுத்தி கொண்டிருக்கிறேன். கடந்து சென்றதை திரும்பிப் பார்ப்பதில்லை
- இத்தனை ஆண்டுகள் கடந்தும் எனக்கு விருதுகளைவிட ரசிகர்களின் அன்பை முக்கியமானதாகவும், போதுமானதாகவும் கருதுகிறேன்
- யூட்யூப் நம்பர்கள்தான் ஒரு பாடல் ஹிட்டா இல்லையா என்பதை முடிவு செய்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை எங்கோ ஒரு டீ கடையில் என் பாடலை ரசித்து கேட்கிறார்கள் என்றால் அதுவே அந்த பாடல் ஹிட் என்பதை உணர்த்துவாக கருதுகிறேன்
- நா. முத்துகுமாரின் இடத்தை யாராலும் நிரப்பிட முடியாது. அவரை மிஸ் செய்கிறேன். ஆனால், அவரை அடுத்து பா.விஜய், விவேக் போன்ற பாடல் ஆசிரியர்களுடனும் நிறைய ஹிட்ஸ் அமைந்திருக்கிறது.
- ஒரு நாள், விஜயுடன் பணியாற்றும் ஜகதீஷ் ஒரு புகைப்படத்தை அனுப்பினார். அதில், விஜய் மகன் “யுவனிசம்’ என்ற டி-சர்ட் அணிந்திருந்தார். அதை பார்த்ததும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதை நான் வெளியில் பகிரவில்லை. ஏனென்றால், மிகவும் பர்சனலாக உணர்ந்தேன்! பின் ஒரு நாள் எனக்கு தெரியவந்தது, அந்த புகைப்படத்தை அனுப்ப சொன்னதே விஜய் சார்தான் என்று!
- எனக்கு உண்மையில் இந்தி தெரியாது. யாரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த டி-சர்ட்டை அணியவில்லை
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion