(Source: ECI/ABP News/ABP Majha)
Govind Vasantha: எந்த டென்ஷனும் இல்ல; தண்ணி அடிச்சுகிட்டுதான் மியூசிக் போட்டேன் - ப்ளூ ஸ்டார் இசையமைப்பாளர் கலகல!
Govind Vasantha: ப்ளூ ஸ்டார் படத்திற்கு இசையமைப்பது ரொம்பவே ஜாலியாக இருந்தது. அறிவு நிறைய இடத்தில் எனக்கு கம்போஸிங்கில் உதவியாக இருந்தார். பா. ரஞ்சித் தீவிர ரசிகன் நான் - கோவிந்த் வசந்தா
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்து தற்போது தன்னுடைய சொந்த படைப்பு மூலம் அறிமுக இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார் எஸ்.ஜெயக்குமார். அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோரின் நடிப்பில், கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார்.
வரவேற்பை பெற்ற இசை :
கோவிந்த் வசந்தாவின் இசையில் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன் திருமணத்தை முன்னிட்டு ப்ளூ ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'ரயிலின் ஒலிகள்' பாடல் வெளியாகி ட்ரெண்டிங்கானது. அதைத் தொடர்ந்து இரண்டாவது சிங்கிளான அறிவு பாடிய 'அரக்கோணம்' பாடல் வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்தது. இப்படல்கள் மூலம் படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த வசந்தாவின் இசை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கலகலப்புடன் கோவிந்த் வசந்தா :
ப்ளூ ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது.
இந்த விழாவில் கலந்து கொண்ட படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில் "இப்படத்தில் பணிபுரிந்த நடிகர்கள், இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். அதிலும் குறிப்பாக அறிவுக்கு எனது நன்றிகளை நான் சொல்லியே ஆக வேண்டும். நிறைய இடத்தில் எனக்கு கம்போஸிங்கில் உதவியாக இருந்தார். அரக்கோணம் பாடலில் எனக்கு நிறைய உதவி செய்தார். பா. ரஞ்சித் சாரின் தீவிர ரசிகன் நான். அவருடைய படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமையாக நினைக்கிறேன். இயக்குநர் ஜெய் மிகவும் அன்பானவர். அவருடன் பணிபுரிந்ததும் நல்ல அனுபவமாக இருந்தது.
ப்ளூ ஸ்டார் படத்திற்கு இசையமைப்பது ரொம்பவே ஜாலியாக இருந்தது. பொதுவாக பல துணை இயக்குநர்கள், எடிட்டர் என பலருடன் சேர்ந்து பணிபுரிய வேண்டி இருக்கும். ஆனால் இந்த படத்திற்காக யாருமே என்னுடன் இல்லை. ஜெய் அண்ணன், அறிவு மற்றும் நான். இருவருடனும் சேர்ந்து ஜாலியா தண்ணி அடிச்சுகிட்டே கம்போஸிங் செய்தேன். பிஜிஎம் கூட அப்படி தான் தண்ணி அடிச்சிட்டே ஜாலியா செய்துவிட்டேன். கரெக்ஷன், டென்ஷன் இல்லாம ஜாலியா இந்த படத்துக்கு மியூசிக் செய்துவிட்டேன். யாருமே போன் பண்ணி என்னை டென்ஷன் செய்யவில்லை. ரொம்ப அமைதியா என்னால வேலை செய்ய முடிந்தது. படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள். அனைவருக்கும் நன்றி" எனப் பேசியுள்ளார்.