HBD Mrunal Thakur: டிவியில் தொடங்கி பான் இந்தியா நடிகை வரை... ‘சீதா மகாலட்சுமி’ மிருணாள் தாகூர் பிறந்தநாள் ஸ்பெஷல்!
தவித பின்புலமும் இன்றி பாலிவுட்டில் சீரியல் உலகில் முதலில் காலடி எடுத்து வைத்து, பின் பல போட்டிகளுக்கு நடுவே தனது கடின உழைப்பால் முன்னேறி வெள்ளித்திரை வாய்ப்பை பெற்றார்.
தொலைக்காட்சியில் பிரபலமான நடிகர்களாக இருந்து பின்னர் சினிமாவில் வாய்ப்பு பெற்று இன்று ஸ்டார் நட்சத்திரங்களாக இருக்கும் பலரை இந்தத் திரையுலகம் கண்டுள்ளது. அந்த வகையில் தொலைக்காட்சி மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய நடிகை மிருணாள் தாகூர் ஒரே படம் மூலம் பிரபலத்தின் உச்சிக்கு சென்று விட்டார். இன்று அவர் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2012ல் முஜ்சே குச் கெஹ்தி...யே காமோஷியான் மற்றும் குங்கும் பாக்யா உள்ளிட்ட இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் நடிப்பு கேரியரை தொடங்கிய மிருணாள் தாகூர், எந்தவித பின்புலமும் இன்றி பாலிவுட்டில் சீரியல் உலகில் முதலில் காலடி எடுத்து வைத்து, பின் பல போட்டிகளுக்கு நடுவே தனது கடின உழைப்பால் முன்னேறி வெள்ளித்திரை வாய்ப்பை பெற்றார். 2018ஆம் ஆண்டு லவ் சோனியா என்ற இந்தி படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே பாலியல் தொழில் சிக்கிக் கொண்ட ஒரு பெண்ணாக சவாலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கணிதவியலாளர் ஆனந்த் குமாரின், வாழ்க்கை வரலாற்றுக் கதையை மையமாகக் கொண்டு வெளியான சூப்பர் 30 படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் பாலிவுட் சினிமாவில் ஒரு முக்கியமான இடத்தை கைப்பற்றினார்.
பெரும்பாலும் பாலிவுட் படங்களில் நடித்து வந்த மிருணாள் தாகூர் கடந்த ஆண்டு ஹனு ராகவபுடி இயக்கத்தில் தெலுங்கில் உருவாக்கப்பட்டு பின்னர் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான 'சீதா ராமம்' திரைப்படத்தில் இளவரசி நூர்ஜஹான் எனப்படும் சீதா மகாலக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்தது மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து அவரை அனைவரும் சீதா மஹாலக்ஷ்மி எனக் கொண்டாடி தீர்க்கும் அளவுக்கு பிரபலமானார் மிருணாள். அதன் மூலம் ஃபேவரட் தென்னிந்திய நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்றார்.
சீதா மகாலக்ஷ்மி என்ற மிகவும் மென்மையான கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்த மிருணாள் தாகூர் இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவரின் சம்பளத்தை மூன்று மடங்காக உயர்த்தும் அளவுக்கு உயர்ந்து விட்டார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமீபத்தில் படு கிளாமரான பிகினி உடையில் போட்டோஸ் போஸ்ட் செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
தற்போது பூஜா மேரி ஜான், பிப்பா, ஆன்க் மிச்சோலி உள்ளிட்ட இந்தி திரைப்படங்களிலும், வணக்கம் நன்னா என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். காதல் கதையை மையமாக வைத்து ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தில் ராஜு தயாரிப்பில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் மிருணாள் தாகூர்.
மிருணாள் தாகூர் மேலும் பல படங்கள் தமிழிலும் நடிக்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.