கோமாவில் இருந்த மகளுக்காக போராடிய பிரபல நடிகை.. பிணவறையில் விட்டு சென்ற கணவர் - வேதனையின் உச்சம்!
மகளின் மரணத்திற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் அளவிற்கு அந்த நடிகை மட்டுமின்றி அவரது குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. அந்த நடிகை யார் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.

நடிகர், நடிகைகளின் சினிமா வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியானதாக தெரிந்தாலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பல ரகசியங்களும், வேதனைகளும் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தானே ஆகணும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, அவர்கள் என்ன செய்தாலும் சில விஷயங்கள் அவர்களை தாண்டி வெளியே கசிந்து விடுகிறது.
அதில் இன்பமும் இருக்கும், துன்பமும் இருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையை தான் அந்த நடிகை வாழ்ந்து வந்துள்ளார். தனது மகளின் மரணத்திற்காக இறைவனிடம் வேண்டும் அளவிற்கு அந்த நடிகையின் சோகம் இருந்துள்ளது என்றால் நம்ப முடிகிறது? அப்படி என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ளும் முன் அந்த நடிகை யார் என்பதை பார்ப்போம்.

அந்த நடிகை வேறு யாருமில்லை, மௌஷூமி சட்டர்ஜி. பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். வினோத் மெஹ்ரா, அமிதாப் பச்சன் என்று பல மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். ரசிகர்களால் அழகு தேவதை என வர்ணிக்கப்பட்டவர். பாலிவுட்டில் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்தில் அதிக சம்பளம் பெரும் முன்னணி நடிகையாக உயர்ந்தவர். தனது 10 வயதில் சினிமாவில் அறிமுகமான மௌஷூமி, 15 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவர் ஜெயந்த் முகர்ஜியை திருமணம் செய்து கொண்டார். 17 வயதில் பெண் குழந்தைக்கு அம்மாவானார். அதன் பிறகு 25 வயதில் 2ஆவது பெண் குழந்தையும் பெற்றெடுத்தார்.
சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்த போதும் கூட எந்தவித சர்ச்சையிலும் அவர் சிக்கவில்லை. இவரது மூத்த மகள் பாயல் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது. 2018 ஆம் ஆண்டு திடீர் என நீதிமன்ற படி ஏறிய இவர்... தனது மகள் பாயலுக்கு தன்னை பாதுகாவலராக நியமிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இதற்கு காரணம் பாயல் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் 3 ஆண்டுகள் கோமாவில் இருந்தார்.

நோய்வாய்ப்பட்டு தனது மகள் கோமாவில் இருந்த போது அவரை பார்க்க விடாமல் அவரது கணவரும் குடும்பத்தினரும் தடுத்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக அந்த சமயத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்... "என்னுடைய மகள் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதோடு கோமாவில் இருந்து போராடிக் கொண்டிருந்த போது அவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். அவள் அழகானவள். இனிமேலும் அவள் வேதனையை அனுபவிப்பதை என்னால் பார்க்க முடியவில்லை. இதற்கு அவள் அந்த இறைவனிடமே சென்று விடலாம் என கூறினார்".
அவரது வேண்டுதலும் நிறைவேறியது. 2019ல் அவரது மகள் பாயல் உயிரிழந்தார். கடைசி வரை பாயலின் முகத்தை மௌஷூமி பார்க்கவே இல்லை. இதற்கு மருமகனும் அவரது குடும்பத்தினரும் தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். தனது மகளின் பாதுகாப்பிற்காக தன்னை பாதுகாவலராக நியமிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்ற நிலையில் இரு குடும்பத்தினருக்கும் இடையில் மனக் கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, மகளின் இறுதி சடங்கை கூட அவர்களே செய்தனர். மருத்துவமனையில் இறந்த மகளுக்கான மருத்துவமனை பில்லை கூட அவர்கள் கட்டவில்லை. இதன் காரணமாக அவளை பிணவறைக்கு மாற்றிவிட்டனர் என்று வேதனையோடு கூறி இருந்தார்.





















