மீண்டும் வருகிறார் ஜார்ஜ் குட்டி.. கேரளாவை கலக்கும் த்ரிஷ்யம் 3 ஆம் பாகத்தின் போஸ்டர்
ஜார்ஜ் குட்டி மற்றும் அவரது குடும்பத்தை மீண்டும் சந்திக்க தயார் ஆகுங்கள்!
மோகன் லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படம், மலையாள டைரக்டர் ஜீத்து ஜோசப்பின் சிறந்த படம் என்றே கூறலாம். த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. தமிழில் கமல் ஹாசனின் நடிப்பில் ‘பாபநாசம்’ என்று ரீமேக் செய்யப்பட்டது. தமிழ் சினிமா ரசிகர்களில் இடையிலும் இப்படத்தின் ரீமேக் கொண்டாடப்பட்டது. முக்கியமாக க்ளைமாக்ஸில் பிணத்தை தேடும்போது, நாயின் சடலம் கிடைக்கும் அப்போது இறந்த மகனின் தரப்பினர் அனைவரும் ஒரே நேரத்தில் திரும்பி பார்க்கும் சீன் புல் அரிக்க வைத்திருக்கும்.
View this post on Instagram
படத்தின் முதல் பாகம் சஸ்பென்சுடன் முடிந்த நிலையில், த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் அந்த சஸ்பென்சை தக்கவைத்தது. இப்போது மக்களின் கேள்விகளையும் குழப்பங்களையும் தீர்க்கும் வகையில் மூன்றாவது பாகத்தின் போஸ்டர் வெளியாகிவுள்ளது. இந்த பாகத்திலாவது படத்தின் மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்க படுமா அல்லது மேலும் அடுத்த அடுத்த பாகங்கள் எடுக்கபடுமா என்ற கேள்விக்கு பதிலாக த்ரிஷியம் 3 கன்க்லுஷன் என்று குறிப்பிட்டு போஸ்ட்ரை ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இது அதிகாரப்பூர்வ போஸ்டர் இல்லை என்றாலும், படம் வருவதாக பேச்சு பரவலாக இருப்பதால், பயங்கரமாக ஷேர் செய்து வருகின்றனர்.
Drishyam 3 The Conclusion
— Thomas Shelby (@TheBossOfPeaky) August 11, 2022
God Level Hype On Card 🔥😌#Mohanlal @Mohanlal https://t.co/fSLcAU0V5s pic.twitter.com/H8FQTPhXsm
திரைக்கதை சரியாக எழுதி முடிக்க காத்திருப்பதாக இயக்குநர் ஜீத்தூ ஜோசப் கூறியிருந்தார். அடுத்த பாகத்திற்கு மக்கள் அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்ப்பார்பினை பூர்த்தி செய்ய எங்கள் மீது எல்லை மீறிய பிரஷர் உள்ளது என்று முன்னதாககுறிப்பிட்டிருந்தார்.
Drishyam 3🔥
— APJ (@IamAbhijithPJ) August 12, 2022
Jeethu joseph 🔥
L💚 pic.twitter.com/29CEayMeU2
ரசிகர் வெளியிட்ட ஒரே ஒரு போஸ்டர் வெளியீட்டுக்கே சமூக வலைதளத்தில் வேற லெவல் ரெஸ்பான்ஸ் குவிந்து வருகிறது. வித்தியாசமான கதைகளத்துடன் வெளிவரும் மாலிவுட் படங்களுக்கு பல ரசிகர் உள்ளனர் என்பது உறுதியாகிறது.