மேலும் அறிய

இனிமேல் சூர்யா பக்கம் போகமாட்டேன்..ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த மோகன் ஜி

சூர்யாவைப் பற்றி இனிமேல் தான் எந்த வித கருத்தும் சமூக வலைதளத்தில் தெரிவிக்க மாட்டேன் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்

ஜெய் பீம் படம் வெளியானது முதல் நடிகர் சூர்யா மீது அவ்வப்போது தனது விமர்சனங்களை தெரிவித்து வந்த மோகன் ஜி தற்போது இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். இனிமேல் சமூக வலைதளங்களில் சூர்யா பற்றி பேசவோ அல்லது சூர்யா ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவோ மாட்டேன் என ரங்கராஜ் பாண்டே பேட்டியில் தெரிவித்துள்ளார். 

சூர்யா தயாரிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெய் பீம் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் காட்சி ஒன்றில் குறிப்பிட்ட சாதியினரை விமர்சிக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் சர்ச்சை எழுந்தது. அதே சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர் மோகன் ஜி அப்போது முதல் நடிகர் சூர்யா மீது தனது விமர்சனங்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். 

கடந்த ஆண்டு ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சூர்யா காப்பீடு ஏற்பாடு செய்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என மோகன் ஜி பதிவிட்டார். இதனால் கடுப்பான சூர்யா ரசிகர்கள் அவரை பயங்கரமாக விமர்சித்தனர். இதுகுறித்து ரங்கராஜ் பாண்டேவுக்கு அளித்த நேர்காணலில் மோகன் ஜி பேசியுள்ளார். 

சூர்யாவுடன் எந்த பிரச்சனைக்கும் செல்லமாட்டேன்

சூர்யாவுடனான சர்ச்சை குறித்து பேசுகையில் ' கடந்த ஆண்டு பா ரஞ்சித் இயக்கிவந்த வேட்டுவம் படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதற்காக பா ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனுபவம் வாய்ந்த கலைஞர்களை வைத்து போதுமான ஏற்பாடுகளோடுதான் இந்த சண்டை காட்சிகளை எடுக்கிறார்கள். அதையும் மீறி நடந்த அந்த நிகழ்வு ஒரு விபத்து என்று ரஞ்சித்திற்கு ஆதரவாக நான் ஒரு பதிவிட்டேன். அதனை விமர்சித்து சில கமெண்ட் செய்தார்கள் என்று அந்த பதிவை நீக்கிவிட்டேன். இதன் பின் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது படங்களில் பணியாற்றும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு காப்பீடு வசதி ஏற்பாடு செய்து கொடுத்திருக்கும் தகவலை பகிர்ந்தேன். அந்த பதிவில் சூர்யாவும் இதே போல் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளதாக நிறைய பேர் பதிவிட்டார்கள். 

நான் யூனியனில் விசாரித்தபோது நடிகர்கள் காப்பீடு ஏற்பாடு செய்துதர தயாராக இருந்தாலும் அதற்காக வசதிகள் இங்கில்லை என்றும் சூர்யா ஸ்டண்ட் கலைஞர்களுக்கு அப்படி எந்த காப்பீடு வசதியும் செய்து தரவில்லை என்று சொன்னார்கள். இதை தான் நான் அவர்களிடம் சொன்னேன். உடனே ஜெய் பீம் படத்தில் காலண்டரை பதிவிட்டு என்னை விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். இனிவரும் காலங்களில் சூர்யா பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். " என்று மோகன் ஜி தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை வீட்டில் குந்த வைப்பது சிறந்தது.. நடிகர் பார்த்திபன் பேச்சால் வெடித்த சர்ச்சை!
த்ரிஷாவை வீட்டில் குந்த வைப்பது சிறந்தது.. நடிகர் பார்த்திபன் பேச்சால் வெடித்த சர்ச்சை!
சூர்யா 46 - ரீமேக் இல்லை, நேரடித் தெலுங்குப் படம்: வெங்கி அட்லூரியின் மாஸ் பிளான்
சூர்யா 46 - ரீமேக் இல்லை, நேரடித் தெலுங்குப் படம்: வெங்கி அட்லூரியின் மாஸ் பிளான்
காலி செய்ய பார்த்த விஜயின் பி.ஆர் ஏஜன்சி ரூட்...வேதனை பகிர்ந்த பிரியங்கா மோகன்
காலி செய்ய பார்த்த விஜயின் பி.ஆர் ஏஜன்சி ரூட்...வேதனை பகிர்ந்த பிரியங்கா மோகன்
Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
அதிமுக பிரமுகர் காரை ஏற்றி கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம், காரணம் என்ன? போலீசார் விசாரணை
Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TAPS: ’’இன்னும் அமலாகாத புது ஓய்வூதிய திட்டம்: திமுகவின் ஏமாற்று வேலை’’- அன்புமணி ஆத்திரம்!
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
குடியரசுத்தலைவரை மதிக்காத அரசு.. டென்ஷனான பிரதமர் மோடி - பதிலடி கொடுத்த மம்தா!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
வாக்குறுதி நல்லாருக்கு.. ஆட்சிக்கு வருவாரா விஜய்? - வானதி சீனிவாசன் கொடுத்த பதில்!
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
Embed widget