Mirchi Siva: நயன்தாரா விக்கியை லவ் பண்ண மிர்ச்சி சிவா தான் காரணமா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதலிச்சு திருமணம் செய்து கொள்ள முக்கிய காரணமே நான் தான் என நடிகர் மிர்ச்சி சிவா சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சூது கவ்வும் 2:
நலன் குமாரசாமி இயக்கத்தில் ரூ.2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.35 கோடி வரையில் வசூல் குவித்த படம் தான் சூது கவ்வும். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் பலர் நடித்த சூது கவ்வும் படம் 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. தற்போது இந்தப் படத்தின் 2ஆம் பாகம் உருவாகியுள்ளது. அதுவும் சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும் என்ற டைட்டிலில் இந்தப் படத்தை எடுத்துள்ளனர்.
காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தை இயக்குநர் எஸ் ஜே அர்ஜூன் இயக்கியுள்ளார். சிவா, எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன் ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 13 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தைப் பற்றிய சிவா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தான் தவறவிட்ட ஒரு படத்தைப் பற்றி இப்போது பேசியுள்ளார்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதல்:
அதில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையிலான காதல் மலர்ந்ததற்கும், இப்போது திருமணமாகி ஹேப்பியாக இருப்பதற்கும் தான் தான் காரணம் என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது முதலில் ஏன் சூது கவ்வும் பார்ட் 2 எடுக்க வேண்டும் என்று யோசித்தோம். அப்படியொரு அருமையான படம். ஆனால், இப்போது எடுக்கப்பட்ட சூது கவ்வும் பார்ட் 2 போன்றே இருக்காது. அது அந்தப் படத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதை விளக்கும் ஒரு படமாக இருந்துச்சு. அதனால், தான் நான் அந்தப் படத்தில் நடித்தேன். படமும் இப்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், நானும் ரௌடி தான் படத்தில் நான் நடிக்க வேண்டியது. விக்னேஷ் சிவன் என்னிடம் கதை சொன்ன போது அந்த கதை எனக்கு ஒர்க் அவுட்டாகாது என்று நான் சொன்னேன். அந்தப் படத்தில் மட்டும் நான் நடித்திருந்தால் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருக்க மாட்டார். அவருக்கு பதிலாக வேறொரு ஹீரோயின் தான் நடித்திருப்பார்கள். படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி முடித்திருப்பார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் மலர்ந்திருக்காது. நான் நடிக்காமல் போனதால் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதல் மலர்ந்து திருமணமும் நடந்தது என்று கூறியுள்ளார்.
மேலும், யாருக்கு என்ன நடக்குமோ அதுதான் நடக்கும். யுவன் ஷங்கர் ராஜா என்னை ஒரு பிஎம்டபிள்யூ கார் வாங்க சொல்ல நான் அந்த கார் வாங்கினேன். ஆனால், மழை வெள்ளத்தில் அந்த கார் முழுவதும் மழையில் நனைந்து பழுதடைந்துவிட்டது. இதுக்காக நான் யாரையும் குற்றம் சொல்ல முடியுமா? இல்லை கவலை தான் பட முடியுமா? இது இயற்கையின் சீற்றம். இயற்கை கொடுத்ததை இயற்கையே பழுதாக்கிவிட்டது என்று கூறியுள்ளார்.