மேலும் அறிய

'தங்களின் நட்பிற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம்' - சிவா & பிரேம்ஜி

SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்களை ஈர்த்து வரும் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியின் புதிய எபிஸோடில் மிர்ச்சி சிவா மற்றும் பிரேம்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.‌

இவர்கள் இந்த நிகழ்ச்சியில் தங்களுடைய 'ஜல்சா பண்ணுங்கடா..' ஸ்டைலில் உற்சாகமாக கலாய்த்து தள்ளினர். இவர்களின் வருகையால் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் பன்மடங்காக பெருகியது.‌

இந்நிகழ்ச்சியில் பிரேம்ஜியிடம் காணப்பட்ட மாற்றம் தான் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. திருமணத்திற்கு முன்பு படப்பிடிப்பு முடிந்ததும் உடன் நடிக்கும் சக நடிகர்களை அவர்களுடைய வீட்டிற்கு செல்ல விடாமல்.. பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதுதான் அவருடைய வழக்கமாக இருந்தது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு... தற்போது குடும்பமே முக்கியமானது என்றும், நாம் அனைவரும் பணி முடிந்த பிறகு வீட்டிற்கு தான் திரும்ப வேண்டும் என்று அவர் நிகழ்ச்சியில் பேசிய போது.. அங்கு இருந்தவர்களும், ரசிகர்களும் ஆச்சரியம் அடைந்தனர். சுருக்கமாக சொல்லப்போனால்.. 'மச்சி ஓபன் தி பாட்டில் என்று பேசிய வாய்... தற்போது 'மாமி ஓப்பன் தி ஊறுகாய் ஜார்' என்ற அளவிற்கு பேசத் தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் பிரேம்ஜியிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

சிவாவும், பிரேம்ஜியும் நெருங்கிய நட்பாக திகழ்வதன் பின்னணி குறித்து கேட்டபோது.. நாங்கள் இருவரும் நெருங்கிய நட்புடன் பழகுவதற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம். அதுமட்டுமல்ல.. அவருடைய ஸ்டுடியோவில் நாங்கள் இருக்கும்போது அந்த இடத்தையே கலகலப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாது அனைவரையும் சந்தோஷப்படுத்துபவர் யுவன்தான். மற்றவர்கள் அறிந்திறாத யுவனின் மற்றொரு பக்கத்தை நாங்கள் இருவரும் நேரில் பார்த்து உள்ளோம்'' என இருவரும் ஒரே வாய்ஸில் பதிலளித்தனர். அத்துடன் யுவன் ஷங்கர் ராஜா எனும் இசை மேதையை பற்றி இவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்ட விசயங்கள் அனைத்தும்... யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் பார்த்து ரசித்து கேட்டு கொண்டாட வேண்டிய விசயங்கள் என்றால்.. அது மிகையில்லை.

நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக பிரேம்ஜி கரகாட்டம் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதிலிருந்து பிரேம்ஜி இசையில் மட்டுமல்ல தான் ஒரு நடன சூறாவளி என்பதை நிரூபித்த தருணங்கள்... ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை வழங்கியது.

பிரேம்ஜி கரகாட்டம் ஆடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதைப் போல்.. சிவாவும் தனது புதிய படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதுடன் 'அகில உலக சூப்பர் ஸ்டார்', என்ற பட்டத்தையும் பெற்று தந்த 'தமிழ்ப்படம்' திரைப்படத்தின் அடுத்த பாகம் தயாராகிறது என்றும், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.‌

அதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஸ்கிரீன் ஸ்பேசை பகிர்ந்து கொண்டதைப் பற்றியும் பாலிவுட் நடிகர் அமீர் கானுடன் நடனம் ஆடிய அனுபவத்தைப் பற்றியும், படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த பல சுவாரசியமான சம்பவங்களை சிவா சிலாகித்தபடியே பகிர்ந்து கொண்டார். அதனுடன் தான் நடித்த படத்தைப் பற்றி அவர் பகிர்ந்து கொண்ட சில தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்... 'ஜாலி ஓ ஜிம்கானா ' நிகழ்ச்சியின் இந்த எபிஸோடை அவசியம் பார்க்க வேண்டும்.

இந்த 'ஜாலி ஓ ஜிம்கானா' எபிஸோட் உங்களை வெகுவாக கவர்ந்தது என்றால்... இதற்கு முன் ஒளிபரப்பான எபிஸோடுகளை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். கடந்த எபிஸோடில் நடிகர் ஹரிஷ் கல்யாண், தான் ஜோடியாக நடிக்க விரும்பும் நடிகையைப் பற்றி மனம் திறந்து பேசி இருந்தார். அத்துடன் ராப் பாடல்களை பாடியும், சிலம்பம் சுற்றியும் தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அது மட்டுமல்ல அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ஜெகனையும் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய புத்திசாலித்தனமான பேச்சால் பாடாய் படுத்தி.. ஆச்சரியப்படுத்தினார்.

SUN NXT இல் பிரத்யேகமாக ஒளிபரப்பாகும் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான திரை பிரபலங்களின் ( தேவி ஸ்ரீ பிரசாத் - ஐஸ்வர்யா ராஜேஷ்- ஹரிஷ் கல்யாண்- சிவா - பிரேம்ஜி..) கலந்துரையாடலை நேரடியாக கண்டு மகிழுங்கள். ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் சன் நெக்ஸ்ட் இல் மட்டும் இதன் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாகின்றன.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
Embed widget