மேலும் அறிய

Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக செப்டம்பர் மாதத்தில் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக 4 முக்கிய ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் 

தென்மாவட்டங்களை தலைநகர் சென்னையுடன் இணைக்கும் மிக முக்கிய ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு 120 விரைவு ரயில்கள் வரை இயக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 442 மின்சார ரயில் சேவையும் எழும்பூர் ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த எழும்பூர் ரயில் நிலையத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.  இதனால் ரயில் சேவைகள் தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். அல்லது ரயில் சேவை ரத்துச் செய்யப்படும். அப்படியாக ஆகஸ்ட் மாதமும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

செப்டம்பர் மாதத்தில் ரயில் சேவையில் மாற்றம்

இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூருக்குப் பதிலாக தற்காலிகமாக தாம்பரம், சென்னை கடற்கரை மற்றும் மாம்பலம் நிலையங்களில் இருந்து புறப்படும் அல்லது சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம். 

  • மன்னார்குடி - சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் மன்னை விரைவு ரயில் செப்டம்பர் 4 முதல் அக்டோபர் 13 வரை இயக்கப்படும். இந்த ரயில் இரவு 10.50 மணிக்கு மன்னார்குடியிலிருந்து புறப்பட்டு எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்தில் தனது பயணத்தை நிறைவு செய்யும்.மறுமார்க்கமாக சென்னை எழும்பூர் – மன்னார்குடி விரைவு ரயில் செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 14 வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11.25 மணிக்கு புறப்படும்.
  • திருச்சி - எழும்பூர் இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை விரைவு ரயில் செப்டம்பர் 9 முதல் 15 வரையிலும்,  செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 14 வரையிலும் எழும்பூருக்குப் பதிலாக மாம்பலம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் திருச்சியிலிருந்து இரவு 10.35 மணிக்கு புறப்படும்.
  • மும்பை சிஎஸ்எம்டி– எழும்பூர் இடையே இயக்கப்படும் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 12 முதல் 15 வரை எழும்பூருக்குப் பதிலாக சென்னை கடற்கரை வரை இயக்கப்படும். 
  • சேலம்– சென்னை எழும்பூர் அதிவேக விரைவு ரயில் செப்டம்பர் 12 முதல் 15ம் தேதி வரை எழும்பூருக்குப் பதிலாக மாம்பலத்தில் தனது சேவையை நிறுத்தும் என கூறப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக எழும்பூர்–சேலம் அதிவேக விரைவு ரயில் செப்டம்பர் 13 முதல் 16 வரை இரவு 11.30 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும்.
  • செப்டம்பர் 16 முதல் 19 வரை மாம்பலம்–கோடம்பாக்கம் வழித்தடத்தில் தஞ்சாவூர் வரை இயகப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். அதேபோல் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 15 வரை 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். 

இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தங்கள் பயணத்தை சரிபார்த்து பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

“என் மகளை ஏதாவது ஒரு கோயில் அருகே விட்டுச் செல்லுங்கள்!” 43 நாட்களாகியும் கிடைக்காத 7 வயது சிறுமி - தாயின் கண்ணீர்க் கோரிக்கை!
“என் மகளை ஏதாவது ஒரு கோயில் அருகே விட்டுச் செல்லுங்கள்!” 43 நாட்களாகியும் கிடைக்காத 7 வயது சிறுமி - தாயின் கண்ணீர்க் கோரிக்கை!
வைகோ தவெக-வை ஆதரித்த பிறகு பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது! வேல்முருகன் காட்டம்!
வைகோ தவெக-வை ஆதரித்த பிறகு பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது! வேல்முருகன் காட்டம்!
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து விபத்து: ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி - நெஞ்சை உலுக்கும் விபத்து!
திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து விபத்து: ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி - நெஞ்சை உலுக்கும் விபத்து!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Shubman Gill: ”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
”எச்சிலை பயன்படுத்த ஏன் இதுவரை அனுமதிக்கவில்லை?” ஐசிசி விதிகளால் கடுப்பான கேப்டன் கில்
Congress:
Congress: "100 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக வேணும்.." அகிலேஷ் யாதவிடம் காங்கிரஸ் கறார் காட்டுவது ஏன்?
Karthigai Deepam:
Karthigai Deepam: "அண்ணாமலையாருக்கு அரோகரா.." நாளை கார்த்திகை தீபம்! தி.மலையில் குவிந்த பக்தர்கள்!
IND vs NZ 1st Test:
IND vs NZ 1st Test: "போச்சு.. எல்லாம் போச்சு.." இந்திய வெற்றியில் மண்ணை அள்ளிப்போட்ட பிலிப்ஸ் - மிட்செல்!
Bisleri Water: ”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
”எங்க தண்ணி பாதுகாப்பானது இல்லையா?” என்ன நடந்தது - பிஸ்லெரி நிறுவனம் விரிவான விளக்கம்
Bisleri Water: ”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
”பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பானது இல்லை” புற்றுநோய் அபாயம் - FSSAI அதிரடி உத்தரவு
Safest SUV: ”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
”உயிருக்கு உத்தரவாதம்னா நாங்க தான்” நாட்டின் பாதுகாப்பான 5 எஸ்யுவிக்கள் - முழு விவரம் இதோ
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
IND vs NZ: அட்டாக்கிங் மோடில் இந்தியா.. தப்பிக்குமா நியூசிலாந்து பேட்டிங்? வெற்றியை வசப்படுத்துவார்களா பந்துவீச்சாளர்கள்?
Embed widget