மேலும் அறிய

Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!

விசிக சார்பில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்த வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமாவளவன் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் பிரச்னையை சந்தித்தார்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விசிக  தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் தொண்டர்கள் தனக்கு மரண பயத்தை காட்டியதாக அக்கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

 தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு

கடந்த 2026 ஆகஸ்ட் 17ம் தேதி விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விசிக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகமும், விசிகவும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும் என அறிவித்தார். 

இந்த மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்த வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமாவளவன் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் பிரச்னையை சந்தித்ததும், அடங்க மறுத்த தொண்டர்களுக்கு அடி கொடுத்த காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் இந்த மாநாட்டில் 3 நிமிடங்கள் மட்டுமே திருமாவளவன் பேசியது தொண்டர்களுக்கு ஏமாற்றமளித்தது. இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். 

கரூரில் நடந்தது போல இங்கு நடந்து விடக்கூடாது. மக்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நெரிசலில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்ற பதற்றம் எனக்கு இருந்தது. அதனால் ஓரிரு நிமிடங்களில் நான் எனது உரையை நிறைவு செய்தேன். அனைவரும் பாதுகாப்பாக திரும்பிச் செல்லுங்கள் என கேட்டுக் கொண்டேன். இன்னும் சில நிமிடங்கள் நான் பேசிக்கொண்டே இருந்திருந்தால் அந்த நெரிசல் எந்தளவுக்கு போயிருக்கும் என கற்பனை கூட செய்ய முடியவில்லை.

அந்த அளவுக்கு கடல் அலை வீசுவது போல விசிக தோழர்கள் ஒருவரையொருவர் தாங்கிப் பிடித்துக் கொண்டு தற்காத்துக் கொண்டு தான்  போராடிக் கொண்டிருந்தார்கள் என்பதை நேரில் பார்த்தவர்கள் உணர முடியும். இதுவரை நாம் நடத்திய எந்த மாநாட்டிலும் இல்லாத அளவிற்கு புதிய இளைஞர்கள் லட்சக்கணக்கில் திரண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

ஜென்ஸி என சொல்லப்படும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வழக்கத்திற்கு மாறாக பெருமளவில் திரண்டிருந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் என்னோடு அந்த நெரிசலிலும் கூட மரண பயணம் மேலோங்கி இருந்த சூழலில் கூட என்னுடன் ஃபோட்டோ எடுக்க காட்டிய ஆர்வம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. நான் ஒவ்வொருவரையும் பாதுகாப்பாக திரும்பிச் செல்லுங்கள் என அந்த நெரிசலிலும் கேட்டுக் கொண்டேன். 

வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், சிறுவர்கள். மாற்றித்தின்றனாளிகள் என அந்த மாநாட்டுக்கு நெரிசலில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்ற கவலை எனக்கு மேலோங்கியது. அதனால் 3 நிமிடங்களில் எனது பேச்சை நான் முடித்துக் கொண்டேன் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Embed widget