மேலும் அறிய

Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?

Skoda Superb: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது ஃப்ளாக்‌ஷீப் மாடலான சூப்பர்ப் காரை ஸ்கோடா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

Skoda Superb: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த 2023ம் ஆண்டு நிறுத்தப்பட்ட, ஸ்கோடாவின் ஃப்ளாக்‌ஷீப் மாடலான சூப்பர்ப்பின் விற்பனை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

ஸ்கோடா சூப்பர்ப் மாடல் அறிமுகம்..!

செக் குடியரைசை சேர்ந்த ஸ்கோடா நிறுவனமானது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து எளிய அணுகலுக்கான வாகனங்களில் கவனம் செலுத்தி வருகிறது.  இதில் குஷக், ஸ்லாவியா மற்றும் கைலாக் மாடல்கள் போன்றவற்றுடன் ப்ரீமியம் காரான கோடியாக் ஆகியவை அடங்கும். அதேநேரம், இந்த ப்ராண்டானது தனது ஃப்ளாக்‌ஷீப் செடானான சூப்பர்ப் மாடலை இந்திய சந்தைக்காக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் தொடர்பான முழு விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஸ்கோடா சூப்பர்ப் - 2027 முதல் விநியோகம்

ஸ்கோடா சூப்பர்பின் நான்காவது தலைமுறை தற்போது இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது. முன்னதாக கடுமையான உமிழ்வு விதிகள் காரணமாக கடந்த 2023ம் ஆண்டு உள்ளூர் சந்தையில் இந்த விற்பனை நிறுத்தப்பட்டது. ஆனாலும், கடந்த 2025ம் ஆண்டு பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட பிறகு புதிய செடானை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர ஸ்கோடா முடிவு செய்துள்ளது. லாரின் & க்ளெமெண்ட் எனப்படும் ஒற்றை வேரியண்டில், முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக இந்த கார் கொண்டுவரப்பட உள்ளது.  விருப்பமுள்ள பயனர்கள் அதிகாரப்பூர்வ டீலர்களை அணுகி தங்களுக்கான முன்பதிவை மேற்கொள்ளலாம். அவர்களுக்கான விநியோகம் 2027ம் ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா சூப்பர்ப் - டிசைன் விவரங்கள்

ஸ்கோடாவின் லைன் - அப்களில் சூப்பர்ப் மாடல் எப்போதுமே ப்ரீமியமாக திகழ்கிறது. அந்த பாரம்பரியத்தை உயர்த்தி பிடிக்கும் விதமாகவே நான்காவது தலைமுறை எடிஷனும் உள்ளது. வெளிப்புறத்தின் முழு சுற்றளவிற்கும் க்ரோம் எலிமெண்ட்கள், 18 இன்ச் அலாய் வீல்கள் மூலம் அதே ஸ்டைலிங்கை பெறுகிறோம். செடான் 4,912 மிமீ நீளம், 1,849 மிமீ அகலம் மற்றும் 1,511 மிமீ உயரம் கொண்டது.  LED மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப்கள், டைனமிக் ப்ளிங்கர்களைக் கொண்ட LED டெயில் லேம்ப்கள் ஆகியவை கவனத்தை ஈர்க்கின்றன.

ஸ்கோடா சூப்பர்ப் - அம்சங்கள், வசதிகள்

உட்புற கேபினானது ப்ரீமியம் லெதர், சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் மற்றும் சில்வர் ஆக்செண்ட்ஸ் உள்ளன. அம்சங்களின் பட்டியலில் 12.9 இன்ச் டச்ஸ்க்ரீன், 10 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், பவர்ட் மற்றும் வெண்டிலேடட் முன்புற இருக்கைகள், மசாஜிங் முன்புற இருக்கைகள், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 14 ஸ்பீக்கர் காண்டோன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், லெவல் 2 ADAS ஆகியவை இடம்பெற்றுள்ளன.  பின் இருக்கைப் பயணிகளுக்கு ஸ்லீப் பேக்கேஜ் மற்றும் சன்பிளைண்ட்ஸ் கிடைக்கின்றன. 360 டிகிரி கோணத்தில் முழுப் பகுதியைக் காட்டும் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த செடான் காரில் 10 ஏர்பேக்குகள், ப்ராக்ரசிவ் டைனமிக் ஸ்டீயரிங் மற்றும் டைனமிக் சேஸிஸ் கன்ட்ரோல் ஆகியவையும் உபகரணப் பட்டியலில் உள்ளன. 

இதையும் படியுங்கள்: Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?

ஸ்கோடா சூப்பர்ப் - பவர்ட்ரெயின் விவரங்கள்

டீசல் கார் பிரியர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியாக இருக்கும். சூப்பர்ப் கார் மாடல் மட்டுமே ஸ்கோடாவின் லைன் - அப்பில் டீசல் இன்ஜின் பெறும் ஒற்றை மாடலாக இருக்கும். சுமார் 150 bhp மற்றும் 290 Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. 7 ஸ்பீட் DSG ட்ரான்ஸ்மிஷன் விசதி வழங்கப்படுகிறது., சர்வதேச சந்தையில் மிகவும் நம்பகமான மற்றும் எரிபொருள் செயல்திறன் சார்ந்த இன்ஜினாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது எப்படி இருக்கும் என பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். உள்ளூருக்கு வரும் மாடலானது ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் ஆப்ஷன் மட்டுமே இருக்கும். பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷன் கொண்டுவரப்படாதாம். பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. 

40KM மைலேஜ் உண்மையா?

ஸ்கோடா சூப்பர்ப் காரின் லிட்டருக்கு 40 கிலோ மீட்டர் மைலேஜ் என்பது , ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பயண சோதனையின் போது எட்டப்பட்டதாகும். 2.0-லிட்டர் TDI டீசல் மாடல், அதிகபட்ச மைலேஜ் வழங்கும் தீவிர நிலைமைகளின் கீழ், 66-லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் முழுமையாக நிரப்பப்பட்டு 2,831 கி.மீ. தூரம் பயணித்து, சராசரியாக ஒரு லிட்டருக்கு சுமார் 38.3 முதல் 42.9 கி.மீ. வரை மைலேஜ் வழங்கியது. அன்றாட நடைமுறை ஓட்டுதலில், சாதாரண எரிபொருள் சிக்கனம் மிகவும் குறைவாகவே இருக்கும். உள்ளூர் சந்தையில் சூப்பர்ப் கார் மாடலின் விலையானது ரூ.60 லட்சம் தொடங்கி 70 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
Embed widget