இதே நாளில் தமிழில் ஷாக் அடித்த ‛மின்சார கண்ணா’ ... அதே கதைக்கு கொரியன் மொழியில் ஆஸ்கர் விருது!
Minsara Kanna: மின்சார கண்ணா படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் மின்சார கண்ணா படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Minsara Kanna movie released today: 23 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டம்... மின்சார கண்ணா திரைப்படம்
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் ஒன்று 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் "மின்சார கண்ணா" திரைப்படம். இப்படம் 23 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய தினமான செப்டம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நடிகர் விஜய், ரம்பா, குஷ்பூ, மோனிகா, மணிவண்ணன், மன்சூர் அலிகான், ஆர். சுந்தர் ராஜன், கோவை சரளா நடிப்பில் வெளியான இப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த நகைச்சுவை திரைப்படம்.
தேவா இசையில் பாடல்கள் இனிமை :
இசையமைப்பாளர் தேவா இசையில் இப்படத்தின் பாடல்களின் வரிகளை எழுதியிருந்தார்கள் கவிஞர் வாலி மற்றும் நா. முத்துக்குமார். "ஊதா ஊதா ஊதா பூ...", "உன் பேர் சொல்ல ஆசை தான்..." போன்ற பாடல்கள் சரியான ஹிட் பாடல்கள். இன்றும் அடிக்கடி இந்த பாடல்களை நாம் கேட்க தவறுவதில்லை.
மசாலா எண்டர்டெயின்மெண்ட் படம் :
நடிகை குஷ்பூ ஆண்களை வெறுக்கும் ஒரு பணக்கார தொழிலதிபர் கதாபாத்திரமாக மிகவும் கம்பீரமான தோற்றத்தில் நடித்திருந்தது ரசிகர்களின் பாராட்டை பெற்றது. குஷ்பூவின் தங்கை மற்றும் விஜயின் காதலியான மோனிகாவை எப்படி குஷ்பூவின் சம்மதத்தோடு கரம் பிடிக்கிறார் என்பது தான் திரைக்கதை. இது ஒரு மசாலா கலந்த எண்டர்டெயின்மெண்ட் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் படமானது. பிரபலங்கள் பலரின் பாராட்டையும் பெற்றது இப்படம்.
கொரியன் வர்ஷன் அப் மின்சார கண்ணா:
2020ம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்று கொரியன் திரைப்படம் "பாராசைட்". இப்படத்தின் கதை கிட்டத்தட்ட கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய "மின்சார கண்ணா" திரைப்படம் போலவே இருந்ததால் சில விமர்சனங்களுக்கு உட்பட்டு சர்ச்சைகள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கொரியன் வர்ஷன் மின்சார கண்ணாவை தமிழ் திரையுலகம் பாராட்டியது.
#MinsaraKanna #23YearsOfMinsaraKanna
— King of Kollywood (@kingofkwood) September 8, 2022
UHD / HD Posters Stills
More At: https://t.co/5ZKd32BbmR @actorvijay #Varisu | #Beast | #Thalapathy67 pic.twitter.com/KQ1hmNJxaA
இன்றும் ட்ரெண்டிங்:
மின்சார கண்ணா படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் இளைய தளபதி விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் மின்சார கண்ணா படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். வழக்கமான காதல் கதை இல்லாமல் சற்று வித்தியாசமான காதல் கதை என்பதால் ரசிகர்களை கவந்தது. அது தான் இப்படம் இன்றும் ட்ரெண்டிங் ஆவதற்கு முக்கியமான காரணம்.
It's been 23 Years Before Thalapathy @actorvijay's #MinsaraKanna Movie Released.! 🥰🤩. #23YearsOfMinsaraKanna #Varisu #Beast #Thalapathy67 pic.twitter.com/8erOQS3y3g
— #Varisu சர்கார் முனாஃப் (@sparkman6819651) September 9, 2022