மேலும் அறிய

Mic Mohan: பொன்னியின் செல்வன் பற்றி கேள்வி... கடுப்பான ‛மைக்’ மோகன்!

Mic Mohan: ஹரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் கேள்வி கேட்கப்பட்டது.

இயக்குனர் பாலுமகேந்திராவின் கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி 80-களில் தமிழ் திரை உலகில் நட்சத்திர நாயகராக வலம் வந்தவர் நடிகர் மோகன்.

மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை,விதி, நூறாவது நாள், கோபுரங்கள் சாய்வதில்லை, மெல்ல திறந்தது கதவு, உதயகீதம், இதயக்கோவில், மௌன ராகம், ரெட்டைவால் குருவி உள்ளிட்ட பல மெகா ஹிட் திரைப்படங்களில் மோகன் நடித்துள்ளார். 

குறிப்பாக நடிகர் மோகன் நடித்த திரைப்படங்களின் பாடல்களும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றதோடு இன்று வரை மோகன் ஹிட்ஸ் என அனைவரது ஃபேவரட் லிஸ்டில் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக நடிப்பிற்கு தற்காலிக ஓய்வு கொடுத்த மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக மோகன் நடித்துள்ள திரைப்படம் ஹரா. 

 நடிகர் சாருஹாசன் கதாநாயகனாக நடித்து கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிவந்த தாதா87 திரைப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ.G எழுதி இயக்கும் ஹரா திரைப்படத்தில் மோகன் உடன் இணைந்து நடிகை குஷ்பூ கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஜெய்குமார், மைம் கோபி, ஆதவன், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Connoisseur of art (@manodinakarn_official)

கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கும் ஹரா படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். இந்நிலையில் ஹரா திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக கயா முயா பாடல் வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மைக் மோகன் , செய்தியாளர்களில்  ஒருவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏற்கனவே பாண்டியன் சோழர்கள் என பல பிரச்சனைகள் போய்க்கொண்டிருக்கிறது இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு ஹரா என்ற பெயர் வைத்துள்ளீர்கள் இதனால் ஏதும் பிரச்சனை ஏற்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு,

 ‛‛இது ஹரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா; இதில் இந்த திரைப்படத்தை பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள்,’’ என்று சற்று கடுப்பாக பதில் அளித்தார் மைக் மோகன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram News | செம்மண் குவாரி ஊழல்அத்துமீறிய பாமக நிர்வாகி கண்டுகொள்ளாத கனிமவளத்துறைAnnamalai SP Velumani | அ.மலைக்கு ராஜ மரியாதை!மீண்டும் துளிர்க்கும் கூட்டணி?கடும் அப்செட்டில் EPSNainar Nagendran in TVK: TVK - வில் நயினார் - குஷ்பூ?தட்டித்தூக்கிய தவெக விஜய்! அப்செட்டில் பாஜக!Dad Son Ear Piercing Ceremony : ’’அப்பாவுக்கும் காது குத்தனும்’’அடம்பிடித்த சிறுவன்ஆசையை நிறைவேற்றிய தந்தை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
TVK Vijay: மக்கள் முன்பு மீண்டும் பேசும் விஜய்! எங்கு? எப்போது? தெறிக்கும் அரசியல்!
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
12th Exam: 11 ஆயிரம் பேர் மிஸ்ஸிங்.. 12ம் வகுப்பு தேர்வில் இப்படி ஒரு சோகமா? கல்வியாளர்கள் ஷாக்
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
கோவை, நெல்லை உள்ளிட்ட 4 நகரங்களில் ரிங் ரோடு: திட்டம்போட்ட தமிழ்நாடு அரசு.!
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
IND vs AUS: இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? வெற்றியைத் தீர்மானிக்கப்போவது இவர்கள் 2 பேருதான் - யாருங்க?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? -  திருமாவளவன் சொல்வது என்ன?
திமுகவால் எங்களுக்கு நெருக்கடியா..? - திருமாவளவன் சொல்வது என்ன?
தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!
தாம்பரத்திற்கு நாளை முதல் பஸ் இல்லை.. அப்செட்டில் தென் மாவட்ட மக்கள்!
அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!
அமைச்சர் சொல்வது சிரிப்பாக உள்ளது; இது கூடவா தெரியாது? ஸ்டாலின் கேட்ட அதே கேள்விதான்: அண்ணாமலை ரிப்ளை!
TN Rain: இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: லிஸ்ட் இதோ.!
Embed widget