Marimuthu Funeral: சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படும் மாரிமுத்து உடல்...கண்ணீர் மழையில் இறுதி ஊர்வலம்...!
மாரிமுத்து உடல் சென்னையில் உள்ல வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தேனிக்கு எடுத்து செல்லப்பட்டது.
Marimuthu Funeral: மறைந்த மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு எடுத்து செல்லப்படுகிறது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடல் எடுத்துசெல்லப்படுகிறது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் மூலம் பிரபலத்தின் உச்சிக்கு சென்றவர் இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து. இவர் இன்று காலை சீரியலின் டப்பிங் பேசி கொண்டு இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கும் போது உயிரிழந்தார். அவரின் இந்த திடீர் இழப்பு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆதி குணசேகரனாகவே ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்த நடிகர் மாரிமுத்து ஒரு திறமையான நடிகர். எதிர் நீச்சல் சீரியலின் முழு வெற்றிக்கும் முக்கியமான காரணமாக கருதப்படுவது அந்த சீரியல் நடிக்கும் நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் சீரியலை தூக்கி நிறுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பது ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. கம்பீரம், கர்வம், குசும்பு, நக்கல், நையாண்டி, திமிர், கிரிமினல் புத்தி என அத்தனை அடாவடியான குணாதிசயங்களையும் ஒன்று சேர்ந்த ஆணாதிக்கம் கொண்டவராக கேரக்டராக மாரிமுத்து நடித்திருப்பார். நடிப்பில் மட்டுமே கடுமையாக நடந்து கொள்ளும் மாரிமுத்து பழகுவதில் எளிமையாக இருந்ததால், அவரது மரணம் சின்னத்திரை நடிகர்களை கலங்கடித்துள்ளது.
இன்று காலை மாரடைப்பால் மாரிமுத்து உயிரிழந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு, மாரிமுத்துவின் உடல் சாலை மார்க்கமாக சொந்த ஊரான தேனிக்கு எடுத்து செல்லப்பட்டது. ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்ட திரை நடிகரின் உடலை பார்த்து அவருடன் நடித்த பிரபலங்கள் கண்ணீர் விட்டு கதறினர். தேனி மாவட்டம் பசுமலை தேரியில் நாளை காலை 10.30 மணியளவில் இறுதி சடங்கு நடைப்பெறும் என அவரது குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.
‘பரியேறும் பெருமாள்’, ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது. இவர் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலி வால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் வில்லனுக்கு துணையாக இருக்கும் கேரக்டரில் நடித்திருந்தார்.
மேலும் படிக்க: Ethirneechal Marimuthu Passes away: இயக்குநரும், நடிகருமான எதிர்நீச்சல் மாரிமுத்து காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலக ரசிகர்கள்..!