MaMannan: 'உதயநிதி ஸ்டாலினின் ஆசை..' மாமன்னன் படம் உருவானது எப்படி..? மனம் திறந்த மாரிசெல்வராஜ்..!
நான் சினிமாவில் இருந்து விலகலாம் என முடிவெடுத்துள்ளேன். உங்களோட எனது கடைசி படம் இருக்கணும்னு ஆசைப்படுறேன் - உதயநிதி ஸ்டாலின்
'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். எளிமையாக எப்படி படம் பண்ண வேண்டும், எளிய மக்களுக்கு புரியக்கூடிய வகையில் படத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு படம் எடுப்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
உதயநிதி ரியாக்ஷன் :
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் அரசியல் சார்ந்த திரைப்படம். தமிழக சட்டமன்ற அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் இனி நடிக்க போவதில்லை என முடிவெடுத்த நிலையில் அவர் கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். உதயநிதி ஸ்டாலின் குறித்தும் அவர் படத்திற்கு எப்படி ஒத்துழைப்பு கொடுத்தார் என்பது குறித்தும் சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
மாமன்னன் எப்படி தொடங்கியது :
அவர் பேசுகையில் " என்னுடைய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' படம் பார்த்துவிட்டு நாம இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்னு சொல்லியிருந்தார். அதற்கு பிறகு 'கர்ணன்' படத்தை பார்த்த பிறகும் என்னை அழைத்தார். ஆனால் அப்போதும் என்னால் அவருடன் இணைந்து படம் பண்ண முடியவில்லை. துருவ் விக்ரம் வைத்து ஒரு படத்தை எடுப்பதற்கான வேலைகளை செய்யும் போது என்னை அழைத்து நான் சினிமாவில் இருந்து விலகலாம் என முடிவெடுத்துள்ளேன். உங்களோட எனது கடைசி படம் இருக்கணும்னு ஆசைப்படுறேன் என் சொல்லி அனைவரிடமும் பேசி மாமன்னன் படத்தை துவங்க வழிவகை செய்து கொடுத்தார்.
இமேஜ் கூடியது :
இப்படத்தின் அவுட்லைன் மட்டும் தான் இருந்தது ஆனால் உதயநிதி சார் வந்த உடன் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டேன். இது அரசியல் சார்ந்த படம் என்பதால் அவர் இதை எப்படி எடுத்துக் கொள்வார் என்ற தயக்கம் இருந்தது. ஆனால் அவருக்கு ஸ்கிரிப்ட் ரொம்ப பிடித்து போனது. படம் குறித்து என்ன சொன்னாலும் ஓகே சொன்னார். அதனால் அவர் மேல இருந்த இமேஜ் இன்னும் அதிகமானது. அனைவரோடும் தயக்கமின்றி பழகினார். அவராகவே கதையை புரிந்து கொண்டு சிறப்பாக நடிக்க துவங்கினார். ஒரு சில ஷாட் எல்லாம் சிங்கிள் டேக்ல ஓகே பண்ணார். கடைசி படம் என்பதால் கொஞ்சம் பெருசா பண்ண வேண்டும் என முடிவு எடுத்தார்.
உதயநிதி மனைவி :
உதயநிதி சார் மனைவி கூட போன் மூலம் அவர் நன்றாக நடித்திருக்கிறார் என சொன்னது எனக்கு மேலும் சந்தோஷத்தை கொடுத்தது. உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் , பகத் பாசில் என அனைவருக்குமே என்னை பற்றின புரிதல் நன்றாக இருந்ததால் அவர்களுடன் இணைந்து பணிபுரிவது எளிதாக இருந்து என கூறியிருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ் .