மஞ்சு வாரியரை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன் ! - எதுக்கு தெரியுமா ?
”வெற்றி சார்தான் என்னை முயற்சி பண்ண சொன்னாரு, அது எனக்கு சந்தோஷமா இருந்தது”
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் அதிகமான ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கிறார் நடிகை மஞ்சு வாரியர். இவர் சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவ். எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கும் மஞ்சு அவரது ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு பாஸிட்டிவ் வைபை கொடுக்க தவறுவதில்லை. தமிழில் இவர் அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கூடுதலாக டப்பிங்கும் செய்திருந்தார். அது பலரின் பாராட்டை பெற்ற நிலையில் , நடிகர் கமல்ஹாசன் மஞ்சு வாரியை வெகுவாக பாராட்டியிருக்கிறார். அது குறித்து நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் மஞ்சு வாரியர்.
View this post on Instagram
"அசுரன் படத்துல நான் டப்பிங் பண்ண விரும்பல . பண்ணனும்னுதான் ஆசை. ஆனால் அந்த ஸ்லாங்குல பேச எனக்கு தெரியாது.இருந்தாலும் நான் முயற்சி பண்ணலை காரணம் என்னால அந்த படத்திற்கு எந்த ஒரு விமர்சனமும் வந்துவிடக்கூடாது என்ற பயம்தான். வெற்றி சார்தான் என்னை முயற்சி பண்ண சொன்னாரு,அது எனக்கு சந்தோஷமா இருந்தது. அதன் பிறகு நிறைய முயற்ச்சி பண்ணேன் .நிறைய தப்பெல்லாம் இருக்கு. ஆனாலும் வெற்றிமாறன் சார் மேனேஜ் பண்ணலாம்னு சொன்னாரு.
இன்னைக்கு என்னால பச்சையம்மா கேரக்டரை வேற குரல்ல நினைத்து பார்க்க முடியலை. அதுக்கு வெற்றி சாருக்கு நன்றி சொல்லனும்.எனக்கு நல்ல படங்கள் பண்ணனும்னு ஆசை. அது எந்த நடிகர்களாக இருந்தாலும் சரி. நல்ல இயக்குநர்கள் கூட பண்ணனும் . எனக்கு எல்லா நடிகர் நடிகைகளையும் பிடிக்கும். நான் சினிமாவுல சொல்லுற அட்ஜெஸ்மெண்ட்ஸ் எதுமே ஃபேஸ் பண்ணது கிடையாது.கமல் சார் படம் பார்த்துட்டு பாராட்டினாரு. படம் நல்லாயிருக்கு. நீங்க நல்லா பண்ணியிருக்கீங்க. தொடர்ந்து நிறைய தமிழ் படங்கள் பண்ணனும்னு சொன்னாரு. “என கூறியுள்ளார் மஞ்சு வாரியர்.
View this post on Instagram