மேலும் அறிய

Actor Vijay Babu: வாய்ப்பு கேட்க சென்றபோது இளம்பெண்ணுக்கு பாலியல் குற்ற புகார்.. மலையாள நடிகர் மீது வழக்கு..

Actor Vijay Babu: பிரபல மலையாள நடிகர் விஜய் பாபு மீது பாலியல் குற்றம் செய்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய் பாபு தலைமறைவாகியுள்ளார்.

மலையாள சினிமாவின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாகிய நடிகர் விஜய் பாபு மீது இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

தான் நடிக்க வாய்ப்பு தேடிச் சென்றதாகவும், வாய்ப்பு வழங்குகிறேன் என்று கூறி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் இளம்பெண் கேரளா அருகே உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் அந்த பெண் அளித்த புகார் அளித்துள்ளார். இதன்பேரில், நடிகர் விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய் பாபு தலைமறைவாகி இருக்கிறார். இது குறித்து செய்தி தி நியூஸ் மினிட்டில் வெளியாகி இருக்கிறது.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி விஜய் பாபு மீது இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய விஜய்பாபு தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி அவர் இது போன்று தவறாக நடந்து கொண்டதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார். புகார் அளித்த பெண் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு (of the Indian Penal Code (IPC) 376, (sexual assault), இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506 குற்றம் கருதி மிரட்டல்  (criminal intimidation),  இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) (voluntarily causing hurt) ஆகிய மூன்று பிரிவின் கீழ் விஜய் பாபு மீது வழக்கு தொடப்பட்டுள்ளது. தற்போது, தலைமறைவாக இருக்கும் நடிகரை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், விஜய் பாபு, தனது ஃபேஸ்புக் லைவில் தன் மீது புகார் அளித்துள்ள இளம்பெண்ணின் பெயரை எல்லாருக்கும் சொல்லப்போவதாகவும், ‘மீ டூ’ -விற்கு இது ஒரு பிரேக் ஆக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அவர் ஃபேஸ்புக் லைவில் பேசுகையில், ‘ தன் மீது எந்த குற்றமும் இல்லை. நான் சட்டத்தை மதிக்கிறேன்.ஆனால், இப்போது நான் தான் பாதிக்கப்பட்டுள்ளேன். அந்தப் பெண் ஆடிசன் மூலம்தான் என் படத்தில் நடிக்க தேர்வானார்.இந்தாண்டு மார்ச் மாதம்தான் அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்திப்பதற்கு முன்னரே, என்னுடன் மெசேஜ் செய்து வந்தார். என்னிடம் 400 ஸ்கிரீன்சாட்ஸ் இருக்கிறது. அதை வெளியிடவும் நான் தயார். என்னைப் பற்றி அவதூறாக பேசிய இளம்பெண் மீது நான் வழக்குத் தொடர்வேன். எது வந்தாலும், அதைச் சட்ட ரீதியில் எதிர்கொள்வேன்.’ என்று கூறியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Dhanya Rajendran (@dhanyarajendran)

நடிகர் விஜய் பாபு மீது எழும் பாலியல் குற்றச்சாட்டு இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, ஒருமுறை பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியவர். ஆனால், பாதிக்கப்பட்டவர், விஜய் பாபு மீது கொடுத்த வழக்கை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
SSC MTS Result 2024: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? காத்திருக்கும் தேர்வர்கள்.!
SSC MTS Result 2024: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு எப்போது வெளியாகும்? காத்திருக்கும் தேர்வர்கள்.!
Embed widget