Nayanthara Vignesh Shivan: பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவுடன் நயன் விக்கி.. ட்ரெண்டிங்கில் போட்டோ..!
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவை சந்தித்து உள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவை சந்தித்து உள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாக, தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணம் கடந்த மாதம் மாமல்லபுரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் குடும்பத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். முதலில் இந்த திருமணம் திருப்பதியில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் பயண தூரம், விஐபி பாதுகாப்பு போன்ற காரணங்களால் தேவஸ்தானம் அனுமதி மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் பின் மாமல்லபுரத்துக்கு மாற்றப்பட்டது.
திருமணம் முடிந்த கையோடு இந்த ஜோடி திருப்பதி சென்று நேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்திற்கு சென்றனர்.
View this post on Instagram
அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அப்படியே தாய்லாந்தில் இருந்து கிளம்பிவிட்டோம் எனவும் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதியோடு திருமணமாகி ஒரு மாதம் முடிந்த நிலையில், திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.