Mahesh Babu with Daughter : மகளுடன் அதிரடி.. மகேஷ் பாபு ஷேர் செய்த நெகிழ்ச்சி போஸ்ட்..
நடனத்தில் அப்பாவை போலவே ஆர்வம் கொண்ட சித்தாராவின் இன்ஸ்டாகிரம் போஸ்ட்டுகள் பெரும்பாலானவை சித்தாராவின் நடனங்களால்தான் நிரப்பப்பட்டிருக்கிறது.
டோலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகேஷ் பாபு ஷூட்டிங் இல்லாத நாட்களில் தனது குடும்பத்துடன் குறிப்பாக குழந்தைகளுடனே நேரத்தை அதிகம் செலவிட விரும்புகிறார். பெண் குழந்தைகள் என்றாலே அப்பாக்கள் அதீத பாசத்துடன் இருப்பார்கள்தானே ! மகேஷ்பாபுவும் அப்படித்தான். அவரது மகள் சித்தாரா என்றால் அவருக்கு கொள்ளை பிரியம். சித்தாரா சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவ் . தனது தோழிகளுடன் இணைந்து யூடியூப் பக்கத்தையும் தொடங்கியுள்ளார். நடனத்தில் அப்பாவை போலவே ஆர்வம் கொண்ட சித்தாராவின் இன்ஸ்டாகிரம் போஸ்ட்டுகள் பெரும்பாலானவை சித்தாராவின் நடனங்களால்தான் நிரப்பப்பட்டிருக்கிறது.
சித்தாராவும் குச்சுப்புடி உள்ளிட்ட சில நடனங்களை முறையாக கற்று வருகிறார். அண்மையில் மகேஷ்பாபுவின் திரைப்படத்தின் டைட்டில் பாடலில் அவரது மகள் சித்தாராவும் ஆடியிருந்தார். இந்த நிலையில் தெலுங்கு ஸீ தொலைக்காட்சியின் டான்ஸ் இந்தியா டான்ஸ் துவக்க விழாவில் மகளுடன் பங்கேற்றியிருக்கிறார் மகேஷ் பாபு. அந்த நிகழ்ச்சி இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதன் மூலம் முதன் முறையாக மகேஷ் பாபும் அவரது மகள் சித்தாராவும் முதன் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கின்றனர். நிகழ்ச்சியின் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சித்தாரா ஸ்டார் கிட் என்ற எந்தவொரு தயக்கமும் இல்லாமல் சதாரணமாக அங்கிருக்கும் போட்டியாளர்களுடன் ஃபன் செய்கிறார்.
வீடியோ :
View this post on Instagram
இதில் பங்கேற்றது குறித்து சித்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுகையில் “ நான் எனது அப்பாவுடன் பங்கேற்கும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி இது. எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல் . நல்ல அனுபவமாக இருந்தது. எனக்கு நடனமாடுவது பிடிக்கும் அதேபோல குழந்தைகள் ஆடுவதை பார்ப்பதும் பிடிக்கும் “ என தெரிவித்துள்ளார். அதே போல மகேஷ் பாபுவும் ” எனது மகள் சித்தாராவுடன் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ..இனிமையான நினைவுகளுக்கு நன்றி ஸீ தெலுங்கு “ என குறிப்பிட்டிருக்கிறார்.
First appearance on TV with Sitara! Thank you @ZeeTVTelugu for this absolutely incredible memory... My best wishes to all the participants of #DIDTelugu!! Coming this Sunday, Sep 4th at 9pm on Zee Telugu!#SSMBxSitaraForDIDTeluguhttps://t.co/COjpZ6Wng6
— Mahesh Babu (@urstrulyMahesh) September 3, 2022