மேலும் அறிய
Advertisement
Rajinikanth Birthday: ரஜினி சிலைக்கு திருவாச்சியும் நாக கிரீடம்; சிறப்பு வழிபாடு நடத்திய ரஜினியின் தீவிர பக்தர்
திருமங்கலத்தில் ரஜினியின் பிறந்த நாளான இன்று 3 அடி உயரம், 250 கிலோ கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட ரஜினி சிலைக்கு திருவாச்சியும் நாக கிரீடமும் அமைத்து சிறப்பு வழிபாடு நடத்திய ரஜினியின் தீவிர பக்தர்.
ரஜினியின் பிறந்த நாளை இன்றிலிருந்து இனிவரும் காலங்களில் ரஜினி சதுர்த்தி நாளாக கொண்டாட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வரும் முன்னாள் துணை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கார்த்திக் என்ற இளைஞர். இவர் தேவி திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இவர் சிறுவயது முதலே ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினிகாந்தின் முதல் படமான அபூர்வராகங்களில் இருந்து ஜெயிலர் படத்தின் போஸ்டர் வரை கார்த்தி தனது அலுவகத்தில் ரஜினிக்கு என்று ஒரு அறையை ஒதுக்கி அதில் ரஜினியின் பல்வேறு புகைப்படம் வைத்து வழிபட்டு வந்த நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்னர் மூன்றடி உயரம் 250 கிலோ கருங்கல்லில் சிலை அமைத்து வழிபட துவங்கியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 48 நாட்களாக ரஜினி சிலைக்கு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. ரஜினியின் பிறந்த நாளான இன்று 12.12.2024- ரஜினி சிலையை குலதெய்வமாக வழிபடும் கார்த்தி.., தெய்வங்களுக்கு கோயில்களில் அமைக்கப்படும் திருவாச்சி போன்று ரஜினி சிலைக்கும் அமைத்து கூடுதலாக நாக கிரீடமும் அமைத்து மேலும் ரஜினி சிலைக்கு அருகில் விளக்குகளும் அமைக்கப்பட்டு கோவிலில் இருப்பது போன்று கோவில் மணியும் அமைத்துள்ளார். இதனை தொடர்ந்து பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட ஆறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து இதனைத் தொடர்ந்து ரஜினியின் சிலைக்கு தீபாராதனை காட்டப்பட்டு குடும்பத்தினரோடு ரஜினியை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மேலும் ரஜினியின் 73 வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் _இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி_ என 73 மொழிகளில் வாழ்த்துக்கள் தெரிவித்து தனது ரஜினி கோவிலில் பேனர் ஆக வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே நடிகர் ரஜினிக்கு கருங்கல்லினால் ஆன சிலையை அமைத்து, நாள்தோறும் அதற்கு அபிஷேகமும், தீபஆராதனைகளும் செய்து வரும் கார்த்தியின் செயல் வினோதமானதே. மேலும் தெய்வத்திற்கு அமைப்பது போன்று திருவாச்சியும் நாக கிரீடமும் விளக்குகளும் கோவில் மணியும் அமைத்து வழிபடுவது மேலும் ஒரு வினோதமே. இதனை பலரும் விமர்சனம் செய்தாலும் நான் வணங்கும் தெய்வம் ரஜினிகாந்த் என்று அவரது குடும்பத்தினர் பெருமிதம் கொள்கின்றனர்.
இதுகுறித்து ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் கூறுகையில், குல தெய்வமான ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், ரஜினியின் பிறந்த நாளை இன்றிலிருந்து இனிவரும் காலங்களில் ரஜினி சதுர்த்தி நாளாக கொண்டாட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ரஜினி சிலையை வைத்து வழிபட பிரத்யேகமாக கோவில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இவருக்கு பின்னால் இவரது சந்ததிகளும் ரஜினியை குல தெய்வமாக வழிபட உள்ளதாகவும் தெரிவித்த அவர் ரஜினியை தன் வாழ்நாளில் நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற வேண்டுமென ஏக்கத்துடன் தெரிவித்தார்.
மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”மழை நீர் வடிகாலுக்கு 4 கோடி கூட செலவு செய்யவில்லை” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி !
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion