Vaa Veera Song: ”வா வீரா..வானில் ஏற்றுமே” மோட்டிவேஷன் மோடில் மாவீரன்: மூன்றாவது பாடல்..!
Maaveeran Third Single: மாவீரன் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், 80களில் கலக்கிய நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகியுள்ளது.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அதேபோல் வண்ணாரப்பேட்டையில் பாடல் அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 14-ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தது. கடந்த ஜூலை 2-ம் தேதி இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.
Soul of #Maaveeran !
— Saregama South (@saregamasouth) July 7, 2023
The mesmerizing #VaaVeera in the voices of @VaikomViji & @bharathsankar12 is Out Now !
- https://t.co/UNFo27u7Yp
🎹#BharathSankar
📝#YugaBharathi#MaaveeranThirdSingle#MaaveeranFromJuly14th#VeerameJeyam
🌟 @Siva_Kartikeyan 🔥
🎬@madonneashwin… pic.twitter.com/23S1UpahXA
இந்நிலையில், ‘மாவீரன்’ படத்தின் வா வீரா எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. நல்ல மெலடியாக உள்ள இந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ளார். மிகவும் உணர்ச்சிகரமான மெலடி பாடலாக இருப்பதால் படத்தில் நல்ல இண்டர்வல் ப்ளாக் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.