Ponniyin Selvan BTS : சோழ தேச ராணிகளுக்கே நகைகளை ஸ்பான்ஸர் செய்த தனியார் நிறுவனம்
லைகா தயாரிப்பு நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா பச்சன், த்ரிஷா மற்றும் நடிகர் கார்த்திக் ஆகியோருக்கு நகை அலங்காரம் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சோழ தேச ராஜ ராணிகளுக்கே நகைகளை தனியார் நகைக்கடை நிறுவனம் ஸ்பான்ஸர் செய்துள்ளது. லைகா தயாரிப்பு நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா பச்சன், த்ரிஷா மற்றும் நடிகர் கார்த்திக் ஆகியோருக்கு நகை அலங்காரம் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
All that glitters is gold! Glad to have @KishanDasandCo as our jewellery sponsors for #PS1 !
In theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada! #ManiRatnam #ARRahman #PonniyinSelvan @madrastalkies_ @arrahman @tipsofficial @primevideoin pic.twitter.com/htSn2bnjce— Lyca Productions (@LycaProductions) August 8, 2022
பொன்னியின் செல்வன் படத்திற்காக ஆவலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு தினசரி அப்டேட்களை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ரிலீஸ் செய்து வருகிறது. ரசிகர்களை வெயிடிங்கிலே வெறியேற்றி ப்ரமோஷன் வேலைகளை அடுத்தகட்ட லெவலுக்கு படக்குழுவினர் கொண்டு சென்றுள்ளனர்.
View this post on Instagram
படத்தின் டீசரில், நடிகை ஐஸ்வர்யா மற்றும் நடிகை த்ரிஷாவை ஒரு பிரதமான ஃப்ரேமில் இருவரையும் அழகாக படம்பிடித்த காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும். டீசர் வெளியான நாளில் ரசிகர்கள், படத்தில் நடித்த ஹீரோ ஹீரோயின்களுக்கு செய்த ஒப்பனை மற்றும் அலங்காரத்தை பார்த்து பெரிதும் வியந்தனர். அதுமட்டுமன்றி, டீசர் வெளியீட்டு விழாவில் நடிகை த்ரிஷா அணிதிருந்த சேலை பெரும் அளவில் பேசப்பட்டது. கிஷான் தாஸ் அண்ட் கோ என்ற நகைக்கடை நிறுவனம் இப்படத்திற்காக அணிகலன்களை ஸ்பான்ஸர் செய்துள்ளது.

