Celebrities In Election: மக்களவை தேர்தலில் எந்த பிரபலங்கள் எங்கெங்கு போட்டியிடுகிறார்கள் தெரியுமா?
Celebrities In Lok Sabha 2024: மக்களவை தேர்தலில் விளையாட்டு, சினிமா உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் போட்டியிடுவது கவனத்தை ஈர்த்துள்ளது.
Celebrities In Lok Sabha 2024: 2024 மக்களவை தேர்தலில் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியே நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது முதல் கட்டமாக சிக்கிம் மற்றும் அருணாச்சல் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 2 ஆம் தேதியும், இதர மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த துறையைச் சேர்ந்த பிரபலங்களை தங்களின் வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளனர். எந்த பிரபலங்கள் எந்த கட்சியின் சார்பாக போட்டியிட உள்ளனர் என்பது குறித்து பார்ப்போம்.
யூசுப் பதான்:
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் மேற்கு வங்க மாநிலத்தின் பஹரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
#WATCH | West Bengal: Former cricketer and Trinamool Congress (TMC) candidate from Berhampore Yusuf Pathan says, "The field is very different but the expectations of the people remain the same- that I work for them, and carry forward the work done by my team (TMC)... I am as… pic.twitter.com/1XGmyrKhTW
— ANI (@ANI) March 21, 2024
ஹேம மாலினி:
பாலிவுட் நடிகையான ஹேம மாலினி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
சுரேஷ் கோபி:
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான நடிகர் சுரேஷ் கோபி, பாஜக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவர் கேரள மாநிலம், திருச்சூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராதிகா சரத்குமார்:
பாஜக கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த சரத்குமாரின் மனைவியும், பிரபல நடிகையுமான ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். இவர் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
விஜய பிரபாகர்:
தமிழ்நாட்டில், அதிமுக கூட்டணியில் தேமுதிக கட்சி சார்பாக கேப்டன் என மக்களால் அழைக்கப்படும் விஜயகாந்த்தின் மூத்த மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார். இவர் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கங்கனா ரனாவத்:
நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பில் மக்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர், இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.