மேலும் அறிய

Prashanth - Simran : பெஸ்ட் ஆன் ஸ்கிரீன் பேர் பிரஷாந்த் - சிம்ரன்... காம்பினேஷன் படங்கள் என்னென்ன தெரியுமா?

Prashanth - Simran : பிரஷாந்த் - சிம்ரன் காம்போவில் வெளியான படங்களின் லிஸ்ட் இதோ.

தமிழ் சினிமா ரசிகர்களால் டாப் ஸ்டார் என கொண்டாடப்பட்டவர் லவ்வர் பாய் பிரஷாந்த். 90ஸ் மற்றும் 2கே காலகட்டங்களில் கொடி கட்டி பறந்த பிரஷாந்த் உடன் ஜோடி சேராத நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி அவருடைய பேராக நடித்ததில் என்றும் எவர்க்ரீன் ஆன் ஸ்கிரீன் பேர் என்றால் அது பிரஷாந்த் - சிம்ரன் தான். அவர்களின் காம்போவில் வெளியான படங்களில் இருவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி பார்வையாளர்களை பிரமிக்க வைத்ததுடன் பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் பிரஷாந்த் - சிம்ரன் காம்போவில் வெளியான படங்களின் தொகுப்பு :


Prashanth - Simran : பெஸ்ட் ஆன் ஸ்கிரீன் பேர் பிரஷாந்த் - சிம்ரன்... காம்பினேஷன் படங்கள் என்னென்ன தெரியுமா?

 

கண்ணெதிரே தோன்றினாள் :

ரவிச்சந்திரன் இயக்கத்தில் 1998ம் ஆண்டு வெளியான இப்படம் தான் பிரஷாந்த் - சிம்ரன் இணைந்து நடித்த முதல் படம். கோயம்புத்தூரை சேர்ந்த வசதியான குடும்பத்து பையனான வசந்த் நண்பனின் தங்கை என தெரியாமலயே பிரியா மீது காதல் கொள்கிறான். நட்புக்காக காதலை கைவிட முடிவு  செய்கிறார் வசந்த். காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் படத்தின் கதை. இந்த ரொமான்டிக் ட்ராமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

 

ஜோடி :

1999ம் ஆண்டு பிரவீன் காந்தி இயக்கத்தில் மீண்டும் ஒரு காதல் படத்தில் ஜோடி சேர்ந்தனர் பிரஷாந்த் - சிம்ரன் ஜோடி. உண்மையான காதலை யாராலும் பிரிக்க முடியாது என்பதை மீண்டும் ஒரு முறை காட்சி படுத்திய படம். கண்ணன் காயத்ரி இருவரின் பெற்றோருக்கும் இடையே இருக்கும் பின்னணி அவர்களின் காதலை ஒன்று சேர விடாமல் செய்கிறது. ஹீரோ ஹீரோயின் இருவரும் காதலை நிரூபிப்பதற்காக ஹீரோவின் வீட்டுக்கு  ஹீரோயினும், ஹீரோயின் வீட்டுக்கு ஹீரோவும் ஆள்மாறாட்டம் செய்து பெற்றோர்களின் அன்பை பெற முயற்சிக்கிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா? காதலர்கள் ஒன்றிணைந்தார்களா? என்பதுதான் படத்தின் கதை.

 

Prashanth - Simran : பெஸ்ட் ஆன் ஸ்கிரீன் பேர் பிரஷாந்த் - சிம்ரன்... காம்பினேஷன் படங்கள் என்னென்ன தெரியுமா?

 

பார்த்தேன் ரசித்தேன் :

சரண் இயக்கத்தில் 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பார்த்தேன் ரசித்தேன்'. கொஞ்சம் விறுவிறுப்பான முக்கோண காதல். பிரஷாந்த் - லைலா காதல் ஜோடி என்றாலும் மிகவும் அன்னியோன்யமான நண்பர்களாக பழகுகிறார்கள் பிரஷாந்த் - சிம்ரன். தோழியாக இருந்த சிம்ரனுக்கு மெல்ல மெல்ல பிரஷாந்த் மீது காதல் வருகிறது. அதனால் வில்லத்தனமான வேலைகளை செய்து பிரசாந்தை அடைய நினைக்கிறார். இந்த ஜோடி ஒன்று சேர்ந்தது என்பது தான் கதைக்களம்.

 

தமிழ் :

இதுவரையில் ரொமான்டிக் ஹீரோவாக இருந்த நடிகர் பிரஷாந்த் ஹரி இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான 'தமிழ்' படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி இருந்தார்.  இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில்  அறிமுகமான திரைப்படம். வெளிநாடு போக முயற்சி செய்யும் ஹீரோ எதிர்பாராத விதமாக லோக்கல் ரவுடிகளின் கோபத்துக்கு ஆளாகிறார். அதன் காரணமாக ஹீரோ வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுகிறது. குடும்பத்துக்காக கனவையும் காதலையும் தியாகம் செய்ய துணிந்த ஹீரோவின் ஆசை நிறைவேறியதா? இது தான் தமிழ் படத்தின் ஸ்டோரி. 

 

அந்தகன் :

நாளை (ஆகஸ்ட் 9) வெளியாக இருக்கும் 'அந்தகன்' படத்தின் மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர் பிரஷாந்த் - சிம்ரன் ஜோடி. இயக்குநரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் இயக்கி தயாரிக்க, கலைப்புலி எஸ்.தாணு வழங்கும் 'அந்தகன்' படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ளது. 

பிரஷாந்த் - சிம்ரன் காம்போ என்றுமே ஒரு சூப்பர் ஹிட் காம்போவாக அமைந்துள்ளது. அவர்களின் கூட்டணி மீண்டும் அந்தகன் படத்தில் இணைந்துள்ளதால் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. 
  

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget