Oscar movies in OTT: கொரோனா நியூஸாவே பாத்து பதட்டமா இருக்கா? ஆஸ்கர் வென்ற திரைப்படங்கள் இப்போது OTT-இல்.. லிஸ்ட் இதோ!
ஓடிடியில் தினமும் புதுப்புது திரைப்படங்கள், தொடர்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், ஓடிடியில் வெளியான ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட, ஆஸ்கர் விருது வென்ற திரைப்படங்களின் லிஸ்ட் இதோ!
நாட்டின் பல பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், சினிமா தியேட்டர்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால், ஓடிடியில் தஞ்சம் புகுந்துள்ளனர் திரை ரசிகர்கள். ஓடிடியில் தினமும் புதுப்புது திரைப்படங்கள், தொடர்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், ஓடிடியில் வெளியான ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட, ஆஸ்கர் விருது வென்ற திரைப்படங்களின் லிஸ்ட் இதோ!
1. நோமாட்லேண்ட் ; ஓடிடி தளம் – டிஸ்னி ப்ளஸ் ப்ரீமியம்
93-வது ஆஸ்கர் விருதுகளில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு என ஆறு விருதுகளுக்கு தேர்வானது. இதில், மூன்று விருதுகளை வென்ற நோமாட்லேண்ட் திரைப்படம் இப்போது டிஸ்னி ப்ளஸ் ப்ரீமியமில் வெளியாகியுள்ளது. 2007 – 2009 காலகட்டத்தில் பெரும் பொருளியல் நிலைத் தேக்கம் ஏற்பட்டபோது அனைத்தும் இழந்து தவிக்கும் ஒரு பெண், தான் வைத்திருக்கும் வாகனத்தையே வீடாக மாற்றி வாழ்ந்து வருகிறார். அவரைச் சுற்றி நடக்கும் கதைதான் நோமாட்லேண்ட்.
2. மினாரி ; ஓடிடி தளம் – அமேசான் ப்ரைம் வீடியோ
ஆஸ்கர் விருதுகளில், ஆறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட மினாரி திரைப்படம், சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றது. நடிகை யன் யூ-ஜங் இவ்விருதை பெற்றார். 80களின் கொரிய யுத்தத்தின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்ட கொரிய குடும்பம் புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறது. பேரன், பேத்திகளுடன் வாழ்வதற்காக கொரியாவில் இருந்து வருகிறார் மூதாட்டி சூன்ஜா. புலம் பெயர்ந்த ஒரு குடும்பத்தை பற்றிய திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது மினாரி.
3. மாங்க் ; ஓடிடி தளம் – நெட்ப்ளிக்ஸ்
93-வது ஆஸ்கர் விருதுகளில், மொத்தம் 10 விருதுகளுக்கு மாங்க் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. பிரபல இயக்குநர் டேவிட் ஃபின்சர் இயக்கத்தில் வெளியான ‘மாங்க்’ திரைப்படம் இப்போது நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது. 1930-களில் நடக்கு கதைக்களம் கொண்டதால் கருப்பு வெள்ளை படமாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர்கள் கேரி ஓல்ட்மேன், அமாண்டா சேஃப்ரைட், லில்லி கோலின்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
4. சவுண்டு ஆஃப் மெட்டல் ; ஓடிடி தளம் – அமேசான் ப்ரைம் வீடியோ
வாழ்வதற்கான சூழலை உருவாக்கி கொள்ளவும், இக்கட்டான சூழமை சமாளிக்கவும் கற்று கொள்ளும் டிரம்ஸ் இசை கலைஞரின் வாழ்க்கை கதை பற்றி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த ஒலித்தொகுப்புக்கான விருது பெற்ற ‘சவுண்டு ஆஃப் மெட்டல்’ திரைப்படம் அமேசானில் வெளியாகியுள்ளது.
5. தி ட்ரையல் ஆஃப் தி சிக்காகோ 7 ; ஓடிடி தளம் – நெட்ப்ளிக்ஸ்
ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் படத்தில் நடித்த பிரபல நடிகர் எட்டி ரெட்மேன் நடித்துள்ள இத்திரைப்படம், 1960-களில் நடந்த தி ட்ரையல் ஆஃப் சிக்காகோ 7 உண்மை சம்வத்தை தழுவி எடுக்கப்பட்டது. சுவாரஸ்யமான கதைக்களம் கொண்ட இத்திரைப்படம் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.
6. சோல் ; ஓடிடி தளம் – டிஸ்னி ப்ளஸ் ப்ரீமியம்
ஜாஸ் கலைஞரான ஜோ, ஒரு விபத்தில் சிக்கி கொள்கிறார். அவர் உடலைவிட்டு ஆன்மா மறுமைக்குச் சென்றுவிடுகிறது. வாழ்க்கையின் அர்தத்தை புரிந்து கொள்ள அலைகிறார் ஜோ. சிறந்த அனிமேஷன் திரைப்படம், சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் வென்ற ‘சோல்’ டிஸ்னி ப்ளஸ் ப்ரீமியம் தளத்தில் வெளியாகியுள்ளது.
7. மை ஆக்டோபஸ் டீச்சர் ; ஓடிடி தளம் – நெட்ப்ளிக்ஸ்
93-வது ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த ஆவணப்படத்துக்கான விருதைப் பெற்ற ‘மை ஆக்டோபஸ் டீச்சர்’ இப்போது நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது. தென்னாப்பிரிக்க கடல்சார் உயிரினங்களுக்கான செயற்பாட்டாளர் க்ரைக் போஸ்டர் மற்றும் ஆழ்கடல் ஆக்டோபஸின் நட்பை இந்த ஆவணப்படத்தில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.