மேலும் அறிய

LEO New Poster: சஞ்சய் தத் விஜய்க்கு அப்பா இல்ல, டெவில்.. வெளியான புது லியோ போஸ்டர்.. ட்விஸ்ட்டால் குழம்பிய ரசிகர்கள்!

முன்னதாக விஜய் மட்டுமே இடம்பெற்றிருக்கும் போஸ்டர்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், இன்று விஜய், சஞ்சய் தத் இருவரும் இடம்பெற்றிருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஜய் - லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள லியோ படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் - சஞ்சய் தத் காம்போ

“அமைதியாக இரு சண்டை செய்யாதே, அமைதியாக இரு திட்டமிடு, அமைதியாக இரு போருக்குத் தயாராகு” என கடந்தி சில தினங்களாக மூன்று போஸ்டர்கள் வெளியான நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டர் இணையத்தில் கவனமீர்த்துள்ளது.

முன்னதாக விஜய் மட்டுமே இடம்பெற்றிருக்கும் போஸ்டர்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், இன்று விஜய் , சஞ்சய் தத் இருவரும் இடம்பெற்றிருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது.

“அமைதியாக இரு, டெவிலை எதிர்கொள்” எனும் வாசகத்துடன் சஞ்சய் தத்தின் கழுத்தை விஜய் நெரிக்கும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. முன்னதாக சஞ்சய் தத் விஜய்யின் அப்பாவாக இப்படத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது சஞ்சய் தத்தை வில்லன் போல் சித்தரித்து வெளியாகியுள்ள போஸ்டர் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

முந்தைய போஸ்டர்கள்

நேற்று நடிகர் விஜய் அனல் பறக்க சக்கரம் ஒன்றை தயார் செய்து கொண்டிருக்கும்படியான போஸ்டர் ஒன்று வெளியானது. அதற்கு முன்னதாக துப்பாக்கி ஏந்தியபடியும், பனி சூழந்திருக்க விஜய் எதையோ தேடி ஓடுவது போன்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தன.

மேலும் லியோ போஸ்டர்களின் மூலம் கதைக்கான ஹிண்டுகள் தரப்படும் என படக்குழு ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், போஸ்டர்களின் இடம்பெற்றுள்ள வாசகங்களைக் கொண்டு கதையை ரசிகர்கள் ஊகித்து வந்த வண்ணம் உள்ளனர்.

ஏதோ ஒரு டெரரான ஃப்ளாஷ்பேக்கை கொண்ட ஹீரோ, தன் பின்புலத்தை விட்டு காஷ்மீர் சென்று தனியாக, சரியான நேரம் பார்த்து காத்திருந்து, கொஞ்சம் கொஞ்சமாக பழிவாங்க திட்டமிட்டு, அதற்கு தயாராவது போல் இந்தக் கதை அமைந்திருக்கும் என போஸ்டர்களின் வழி தெரிய வருகிறது.

அப்பாவா, வில்லனா?

மேலும், முன்னதாக சஞ்சய் தத் விஜய்க்கு அப்பாவாக நடிப்பதாகவும், நடிகர் அர்ஜூன் வில்லனாக நடிப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த போஸ்டர் ட்விஸ்ட்டை ஏற்படுத்தியுள்ளது.

‘டெவிலை எதிர்கொள்’ எனும் வசனத்துடன் சஞ்சய் தத்தின் கழுத்தை விஜய் நெரிக்கும்படியான புகைப்படம் இடம்பெற்று ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சஞ்சய் தத் இப்படத்தின் ஆண்டனி தாஸ் எனும் கதாபாத்திரத்திலும், அர்ஜூன் ஹெரால்டு தாஸ் எனும் கதாபாத்திரத்திலும் தோன்றுகின்றனர். இவர்களது கதாபாத்திர அறிமுக வீடியோக்கள் முன்னதாக வெளியாகி இணையத்தில் கவனமீர்த்தன.

இந்நிலையில் இந்தக் கதை அண்ணன் - தம்பி இடையிலான பங்காளி சண்டை பற்றியதாகவும், விஜய் சஞ்சய் தத்தின் மகனாக இருப்பார் என்றும் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த போஸ்டர் அனைவரது ஊகங்களையும் திருப்பிப் போட்டு குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: நன்றாகப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
Breaking News LIVE: நன்றாகப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: நன்றாகப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
Breaking News LIVE: நன்றாகப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு; எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க!இதோ நிலவரம்!
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு; எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க!இதோ நிலவரம்!
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Embed widget