Japan Audio Launch: கார்த்தியின் ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ்.. அதிர்ந்த அரங்கம்!
Japan Audio Launch: கார்த்தியின் 25 ஆவது படமாக உருவாகி இருக்கும் ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருகைத் தந்தார்.

ஜப்பான்
ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 25 ஆவது உருவாகி இருக்கும் படம் ஜப்பான். ஜப்பான் படத்தின் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா (Japan Audio Launch) இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கார்த்தி, ராஜூ முருகன் , ஜப்பான் படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர்.பிரபு, நடிகர் பொண்வண்ணன், சத்யராஜ் , சிபி சத்யராஜ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ், சுசீந்திரன் மேலும் பல திரைப் பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ்
Director @Dir_Lokesh on the Red Carpet 🔥#Karthi25 #JapanTrailerLaunch
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 28, 2023
#Japan #JapanMovie
Firing this Diwali 🧨@Karthi_Offl @ItsAnuEmmanuel @vagaiyaar @ksravikumardir #Sunil @vijaymilton @sanalaman @gvprakash @dop_ravivarman @ActionAnlarasu @philoedit #Banglan… pic.twitter.com/bg5Y0aeT2z
இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருகை தந்துள்ளார். லியோ படத்துக்கு பின்பு லோகேஷ் கனகராஜ் சில காலமாக சமூக வலைதளங்களில் அமைதியாக இருந்து வருகிறார். தன்னுடைய படத்துக்கு எந்த மாதிரியான கருத்துக்கள் வெளியாகின்றன, அதில் நேர்மையான கருத்துக்களை எடுத்துக் கொண்டு தன்னுடைய தவறுகளை தான் திருத்திக் கொள்வேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படத்துக்கான வேலைகளையும் தொடங்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் கார்த்தியின் நெருங்கிய நண்பராக லோகேஷ் கனகராஜ் இந்த விழாவுக்கு வருகை தந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் உள்ளே அவர் நுழைந்தபோது மகிழ்ச்சியில் ரசிகர்கள் அரங்கம் அதிர கூச்சலிட்டனர்.
கைதி 2
Here is our #Dilli from #Kaithi and his creator #LokeshKanagaraj!
— Cinema Express (@XpressCinema) October 28, 2023
The reunion we always wanted! #Japan #Karthi25 pic.twitter.com/DzX1HEl0L0
கார்த்தி நடித்த கைதி படம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படங்களில் சிறந்த படமாக இன்று வரை கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் கார்த்தி நடித்துள்ள தில்லி கதாபாத்திரம் அவரது கரியரில் பெயர் சொல்லும் கதாபாத்திரமாக அமைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மேலும் கைதி படத்தின் 2 ஆவது பாகத்தை தலைவர் 171 படத்திற்கு பிறகு தான் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் லோகேஷ். சமீபத்தில் தனது சகோதரர் சூர்யாவுடன் நடிக்க தான் தயாராக இருப்பதாக கார்த்தி தெரிவித்திருந்தார். ரோலக்ஸாக சூர்யாவும் தில்லி கதாபாத்திரத்தில் கார்த்தியும் இணைந்து நடிப்பதைப் பார்க்க ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கைதி 2 படம் குறித்த அப்டேட்களை லோகேஷ் கனகராஜ் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
ஜப்பான்
கார்த்தி, அனு இமானுவேல், கே.எஸ் ரவிகுமார், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்டோர் ஜப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வருகின்ற நவம்பர் மாதம் 10 ஆம் தேதி ஜப்பான் படம் வெளியாக இருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

