இயக்குனர் சங்கருக்கு ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ்
கதை உரிமை தொடர்பாக இயக்குனர் சங்கருக்கு பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் திரைப்படத்தை மீண்டும் ஹிந்தி மொழியில் உருவாக்கவுள்ளார் பிரபல இயக்குனர் சங்கர். இதற்கான அதிரகாரப்பூர்வ அறிவிப்பையும் ரன்வீருடன் உரையாடும் ஒரு புகைப்படத்தையும் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
The original #Anniyan's producer Aascar V Ravichandran takes offense to the just-announced #AnniyanHindiRemake. Here's a very sharp, critical press statement from the veteran producer directed at #Shankar pic.twitter.com/63yAmQAINv
— Kaushik LM (@LMKMovieManiac) April 15, 2021
இந்நிலையில் இயக்குனர் சங்கருக்கு எழுதிய கடிதத்தில் அந்த படத்தின் தயாரிப்பாளர் நான், அந்த கதையின் முழு உரிமத்தையும் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து நான் பெற்றுள்ளேன். மேலும் அதற்கு உண்டான முழு பணத்தையும் அவரிடம் ஒப்படைந்துள்ளேன், அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது. ஆகையால் மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் உடனே படத்திற்கான வேலைகளை நிறுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை தொடர்ந்து சட்டப்பூர்வமாக நோட்டீசும் சங்கருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் ரவிச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்தி அந்நியன் வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.