(Source: ECI/ABP News/ABP Majha)
”மதிக்கத்தெரியுமா உனக்கு?” : இறந்த மாணவியுடன் ஒப்பிட்டு கமெண்ட்.. நெட்டிசனை விளாசிய நடிகை லாவண்யா..
ஆரம்பத்தில், திருமணம் குறித்து வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று லாவண்யா திரிபாதி பொறுமையாக பதில் கூறினார். ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து அதுபற்றியே கேள்வி எழுப்பினர்.
தெலுங்கு நடிகையான லாவண்யா திரிபாதி, தமிழில் ‘பிரம்மன்’, ‘மாயவன்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் கிளாமர் வேடத்தை குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். சக ஹீரோயின்களின் கவர்ச்சி போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாததால் லாவண்யாவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் கவர்ச்சிக்கு மாற முடிவெடுத்தார் லாவண்யா. பின்னர் கவர்ச்சி உடையில் தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டார். அதற்கு பலன் கிடைத்தது. சமீபத்தில் அவர் நடித்து திரைக்கு வந்த தெலுங்கு படமொன்று ஹிட்டானது. இதையடுத்து மேலும் 4 படங்களில் மளமளவென நடித்து எல்லாம் அவருக்கு பெயரை பெற்றுத்தந்தது. தற்போது அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தனது கவர்ச்சி படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
அதுமட்டுமின்றி லாவண்யா திரிபாதி அவ்வப்போது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் உரையாடி வருவார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களுடன் அவர் உரையாடும் பொழுது, அவர் திருமணம் செய்துகொண்டது உண்மையா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினார். ஆரம்பத்தில், எனது திருமணம் குறித்து வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று லாவண்யா திரிபாதி பொறுமையாக பதில் கூறினார். ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து அதுபற்றியே கேள்வி எழுப்பியதால், "என் திருமணம் பற்றி என்னைவிட ரசிகர்களாகிய உங்களில் பலருக்குத்தான் அதிக விபரம் தெரிந்திருக்கிறது" என்று கொஞ்சம் கடுப்பாகி கூற, அதன்பிறகுதான் ரசிகர்கள் அப்படி கேட்பதை நிறுத்தினார்கள்.
எப்போதும் சமூக வகைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாவண்யா திரிபாதியின் பெயர் மாணவி தற்கொலையுடன் சேர்த்து புரிந்துகொள்ளப்பட்டதால் ஹேஷ்டேக்கில் கருத்துகளை சிலர் பதிவிட, அதற்கு ஒருவர், “லாவண்யா திரிபாதி ஒரு நடிகை. அவர் எந்த தியாகத்தையும் செய்யவில்லை. அதனால் தற்கொலை செய்துகொண்ட மாணவியை, மலிவான இந்த நடிகையுடன் ஒப்பிட வேண்டாம்” என்று கூறியிருந்தார்.
இதில் ’மலிவான நடிகை’ என்ற வார்த்தை லாவண்யா திரிபாதிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த நெட்டிசனை அவர் விளாசியுள்ளார். “உங்களைப் போன்றவர்கள், பெண்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால்தான் மதிக்கத் தொடங்குகிறீர்கள். மலிவானவள் என்று அழைப்பதற்கு முன், எப்படி மதிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். ஆனால், இதுதான் நம் சமூகத்தின் உண்மை” என்று அவர் கடுமையாக கருத்து தெரிவித்தும் வைரலாகி இருந்தது.