மேலும் அறிய
Advertisement
Lal Salaam Rajini: லால் சலாம் படத்திற்கு டப்பிங் பேசிய பிரபலம் - பாட்ஷாவுக்கே இவர் குரல்தான்!
Lal Salaam Rajini: ரஜினி நடித்த படங்கள் தெலுங்கில் ரிலீஸ் செய்யும்போது பாடகர் மனோ டப்பிங் பேசியுள்ளார். ஆனால், இந்த முறை லால் சலாம் படத்திற்கு மனோ டப்பிங் பேசவில்லை.
Lal Salaam Rajini: லால் சலாம் படத்தில் ரஜினிக்கு டப்பிங் பேசிய பிரபலம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் லால் சலாம் படம் இன்று திரைக்கு வருகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக கொண்டு உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட லால் சலாம் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடித்துள்ளனர். இவர்களை தவிர செந்தில், லிவிங்ஸ்டன், ஜீவிதா, நிரோஷா, தம்பி ராமையா, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
லால் சலாம் படத்தின் ரிலீஸை ஒட்டி ரஜினி இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், ரஜினிக்கு டப்பிங் பேசிய தகவலும் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. ரஜினியின் படங்கள் தெலுங்கில் ரிலீசாகும்போது அவரைப்போல் அதே குரலில் டப்பிங் பேசுவது வழக்கம். அந்தவகையில் ரஜினி நடித்த படங்கள் தெலுங்கில் ரிலீஸ் செய்யும்போது பாடகர் மனோ டப்பிங் பேசியுள்ளார். ரஜினி குரலை அப்படியே பேசி அசத்தி இருப்பார் மனோ. ஆனால், இந்த முறை லால் சலாம் படத்திற்கு மனோ டப்பிங் பேசவில்லை. அவருக்கு பதிலாக சாய்குமார் என்பவர் ரஜினி குரலில் டப்பிங் பேசியுள்ளார்.
This Scene 🔥💥🔥
— Rajini Fans Unity (@imranBasha56) February 5, 2024
Mumbai La Bhai Aale Vera Da
Thalaivar 🥵🤩😍https://t.co/gYRyaZnpxQ#LalSalaam #LalSalaamTrailer #Rajinikanth #SuperstaraRajinikanth pic.twitter.com/NK83ORUTec
இவர் ஏற்கெனவே ரஜினி நடித்த பாட்ஷா, நாட்டாமை படத்தின் ரீமேக்கான பெத்தராயுடு உள்ளிட்ட படங்களில் டப்பிங் பேசியுள்ளார். இவரது டப்பிங் வாயிஸ் ரஜினிக்கு செட்டாகவே படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. அந்த சென்டிமெண்ட்டின் அடிப்படையில் லால் சலாம் படத்திற்கு சாய் குமார் டப்பிங் பேசியுள்ளார். கிரிக்கெட் சார்ந்த படமாக இருந்தாலும், அதில் எப்படி சாதி அரசியல் நுழைந்தது என்பதை படம் பேசுவதாக ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். அதேநேரம் ரஜினி நடித்துள்ள மொய்தீன் பாய் கேரக்டர், மத அரசியலை தவிர்த்து மனிதர்கள் அனைவரும் ஒன்றுபட்ட வாழ வேண்டும் என்பதை கூறுகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மேலும் படிக்க: Feb 9th Movie Releases: சூப்பர் ஸ்டாருடன் மோதும் குட்நைட் மணிகண்டன்: நாளை ரிலீசாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion