Kuberaa: ரஜினி மாதிரி பேசினாலும் ஓல்டு கிரிஞ்ச்... தனுஷை பங்கமாய் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
குபேரா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் பேசிய விதத்தை ப்ளூ சட்டை மாறன் பங்கமாய் கலாய்த்துள்ளார்.

ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடித்திருக்கும் குபேரா திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இருப்பினும் தமிழ் ரசிகர்கள் இப்படத்தை பெரிய அளவில் ஆதரிக்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. ப்ரீ புக்கிங்கில் குபேரா திரைப்படம் காத்து வாங்குவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல விமர்சகர் புளூசட்டை மாறன் தனுஷை பங்கமாய் கலாய்த்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இசை வெளியீட்டு விழா
சமீபத்தில் குபேரா படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய தனுஷ், "இது கலி காலம். வெறுப்பு ஓங்கி நிற்கும் காலம். தம்பிங்களா கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க. என்னை காலி பண்ணனும்னு நெனச்சா ஒரு செங்கல்லை கூட ஆட்ட முடியாது. தீப்பந்தம் போல் என் ரசிகர்கள் இருக்கும்வரை நான் மேல போய்க்கிட்டே இருப்பேன்" என படத்தில் வரும் பன்ச் வசனம் போல் பேசியிருந்தார்.
தனுஷை ட்ரோல் செய்த ரசிகர்கள்
தனுஷின் பேச்சு சாதாரணமாக கடந்து போகக்கூடியதாக இல்லை என்றும் சிம்பு திருந்திவிட்டார். ஆனால், இன்னும் தனுஷ் இப்படியே தான் பேசிக்கொண்டிருக்கிறார் என நெட்டிசன்கள் தனுஷ் பேசும் வீடியோவை ட்ரோல் செய்ய தொடங்கியுள்ளனர். மேலும், தனுஷ் யாரை தாக்கி பேசியிருக்கிறார். சிவகார்த்திகேயனையும், நயன்தாராவையும் பற்றி பேசியிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும், தனுஷ் ரஜினிகாந்த் போன்ற பாவணையில் பேசியதும் கிண்டலுக்கு ஆளானது. அவர் பேசுவது ஒன்றும் புரியவில்லை என்றும் தனுஷை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் தனுஷை பங்கமாய் கலாய்த்து பதிவு ஒன்றை போஸ்ட் செய்திருப்பது சர்ச்சையாக மாறியுள்ளது.
நடிகர்களுக்கு தைரியமே இல்லை
யாரை சொல்றாரு? எதுக்கு சொல்றாருன்னு யாருக்கும் புரியவில்லை. நயன்தாராவை சொல்றதா ஒரு குரூப் சொல்லுது. திடீர் தளபதியை (சிவகார்த்திகேயன்) திட்றாருன்னு இன்னொரு குரூப் சொல்லுது. இந்த நடிகர்களுக்கு வெளிப்படையாக பேசும் தைரியமே இல்லை. பேசாம இருக்கவும் முடியவில்லை. ஒரே தமாசுதான். ஆடியோ, டிரைலர் ரிலீஸ் விழாக்களை இப்படி ரசிகர் மன்ற கூட்டமா மாத்துறதே பலருக்கும் வேலையா போச்சு. இது மாதிரி Pre Release பன்ச் எல்லாம் படம் வந்ததும் ட்ரோல் பண்ணத்தான் யூஸ் ஆகும்.
செம காமெடி பன்றாங்க
குறிப்பாக படத்தில் பொழுதுபோக்கு இல்லன்னாலும் இந்த மாதிரி ஃப்ரி ரிலீஸ் நிகழ்ச்சிகளில் நடிகர்கள் பேசும் பேச்சுகள் செம காமெடியா இருக்குடாப்பா. படம் நல்லா இருந்தா பாராட்டுவாங்க. இப்படி பேசுவதெல்லாம் பயங்கர கிரிஞ்சாக இருக்கிறது. இது ரொம்ப பழையது என்பது கூட தெரியாமல் இருக்காங்க. தனுஷ் பேச்சும், மேனரிசமும் அப்படியே ரஜினிகாந்த் மாதிரி இருப்பது நல்ல பொழுதுபோக்கா இருக்கு என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.





















