Krithi Shetty: பிரபல நடிகரின் மகன் காதல் தொல்லை தருகிறாரா? கோபத்தில் க்ரித்தி ஷெட்டி பகிர்ந்த ட்விட்..!
க்ரித்தி ஷெட்டிக்கு பிரபல நடிகரின் மகன் காதல் தொல்லை கொடுத்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது தன் தரப்பு விளக்கத்தை க்ரித்தி கொடுத்துள்ளார்.
வாரியர் மற்றும் கஸ்டடி ஆகிய படங்களில் நடித்த நடிகை க்ரித்தி ஷெட்டிக்கு பிரபல நடிகரின் மகன் காதல் தொல்லை குடுத்து வருவதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஒவ்வொரு நாளும் பூதாகரமாக வளர்ந்து வந்த இந்தத் தகவலுக்கு க்ரித்தி ஷெட்டி கொடுத்துள்ள பதில் என்ன தெரியுமா?
க்ரித்தி ஷெட்டி
லிங்குசாமி இயக்கிய வாரியர் மற்றும் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படங்கள் வழியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் க்ரித்தி ஷெட்டி. இந்தப் படங்களின் வழியாக ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். இந்நிலையில், அண்மையில் க்ரித்தி ஷெட்டி கூறியதாகத் தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வந்தது.
அதாவது பிரபல ஸ்டார் நடிகர் ஒருவரின் மகன் க்ரித்தி ஷெட்டிக்கு காதல் தொல்லை கொடுத்து வருவதைப் பற்றிய தகவல் தான் இது. க்ரித்தி செல்லும் இடங்களுக்கு எல்லாம் செல்வது, மேலும் குறிப்பிட்ட பொது இடங்களுக்கு வரச்சொல்லி, தன்னை காதலிக்கச் சொல்லி அந்நபர் க்ரித்திக்கு தொந்தரவு கொடுத்து வருவதாகவும் தகவல் பரவியது. இந்தத் தகவல் உண்மையா பொய்யா என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில் இந்தக் குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் க்ரித்தி ஷெட்டி பதிவிட்டுள்ளார்.
ட்விட்டரில் மறுப்பு
— KrithiShetty (@IamKrithiShetty) July 6, 2023
தன்னைப் பற்றிய தவறானத் தகவல்களை பகிர்ந்த வீடியோ ஒன்றைப் பகிர்ந்த கஸ்டடி படத்தின் கதாநாயகி “இந்த வதந்தி குறித்து நான் எதுவும் பேச வேண்டாம் என்று பொறுமையாக இருந்து வந்தேன். ஆனால் இந்த விஷயம் இப்போது பூதாகரமாக வளர்ந்து விட்டிருக்கிறது. இதுமாதிரியான தவறான தகவல்களை பரப்புவதை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டு இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் க்ரித்தி ஷெட்டி.
நடித்து வரும் படங்கள்
தற்போது க்ரித்தி ஷெட்டி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ஜீனி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜட்டில் பான் இந்தியா சினிமாவாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ஐஸரி கணேஷ் இந்தப் படத்தை தயாரிக்கிறார் . இதனைத் தொடர்ந்து மலையாள நடிகரான டொவினோ தாமஸின் பான் இந்தியத் திரைப்படமான அஜயண்டே ரண்டாம் மோஷனம் என்கிறப் படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார் க்ரித்தி ஷெட்டி.