மேலும் அறிய

ரஜினி கொடுத்த ஐடியா... பயந்து ஓடிய குஷ்பு! - சுவாரஸ்ய பின்னணி சொன்ன இயக்குநர்

இந்த பாடல் எழுதுவதற்கு முன்னதாக காட்சியை விளக்கிவிட்டு , இதில்  ரஜினி, குஷ்பூ என இருவரின் பெயர்களும் இடம்பெரும்படியாக எழுத வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

அண்ணாமலை:

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் , ரஜினிகாந்த் , குஷ்பு நடிப்பில் 1992  ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அண்ணாமலை . இந்த திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிறது. ஏழை , பணக்கார நண்பர்களிடையே ஏற்படும் விரிசலும் , அதனால் பாதிக்கப்படும் ஏழை நண்பன் எப்படி  தான் விடுக்கும் சவாலில் ஜெயித்து காட்டுகிறார் என்பதுதான் படத்தின் ஒன்லைன் .

கொண்டையில் தாழம்பூ :

அண்ணாமலை படத்திற்கு தேனிசை தென்றல் தேவா இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் , தீம் மியூசிக் என அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களில் ஒன்றுதான் ‘கொண்டையில் தாழம்பூ ‘ . இதனை எஸ்.பி.பி-யும் சித்ராவும் இணைந்து பாடியிருப்பார்கள். இந்த பாடல் எழுதுவதற்கு முன்னதாக காட்சியை விளக்கிவிட்டு, இதில்  ரஜினி, குஷ்பூ என இருவரின் பெயர்களும் இடம்பெரும்படியாக எழுத வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கவிஞர் வாலியிடம் விருப்பத்தை சொல்லவே அவரும் தனது பாணியில் 'கொண்டையில் தாழம்பூ ..நெஞ்சிலே வாழைப்பூ...கூடையில் என்ன பூ..குஷ்பூ 'என எழுதிவிட்டார். 

View this post on Instagram
 
A post shared by 2k__RAJINI (@2k__rajini)

ரஜினி ஐடியா :

ரஜினிக்கு எந்த அளவுக்கு ஆடியன்ஸ் இருந்தார்களோ அதே அளவிற்கு குஷ்புவிற்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருந்தனர். இந்த சூழலில்தான் இயக்குநரிடம் ரஜினிகாந்த் பாடலின் இறுதியில் வரும் வரியை மியூட் செய்துவிட்டு , கூடையில் என்ன பூ என ஆடியன்ஸை நோக்கி கேட்கலாமே என ஐடியா கொடுத்திருக்கிறார். அதுவும் நன்றாகத்தான் இருக்கும் என , ரஜினியின் ஐடியாவிற்கு பச்சைக்கொடி அசைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் குஷ்பு முதன் முதலில் பாடலை கேட்டு சிரித்துவிட்டு , ”என்ன சார் இதெல்லாம்” என கேட்க , ”ரஜினி தியேட்டர்ல பாருங்க “ என கூறியிருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Kushboo Sundar (@khushsundar)

திரையரங்கை விட்டு ஓடிய குஷ்பு :

படம் வெளியானதும் கமலா திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றிருக்கிறார் குஷ்பு. கொண்டையில் தாழம்பூ பாடல் ஒலிக்க ஆரமித்ததும் , கூடையில் என்ன பூ என ரஜினி கேட்க , திரையரங்கே ”குஷ்பூ.....”என கத்தியிருக்கிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத குஷ்பு  பயத்தில் அங்கிருந்து ஓடி வந்துவிட்டாராம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
Jayachandran Death: பெரும் சோகம்! 15 ஆயிரம் பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன் காலமானார் - ரசிகர்கள் வேதனை
"உடனே நடவடிக்கை எடுங்க" இலங்கைக் கடற்படை தொடர் அட்டூழியம்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
"'யோக்கியன் வரான் சொம்பைத் தூக்கி உள்ளே வை" EPS-க்கு எதிராக கொதித்த அமைச்சர் சிவசங்கர்!
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Vaikunta Ekadasi 2025: பக்தர்களே! நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு! கோயிலுக்கு கிளம்புங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
"பணத்தை திருப்பி தரல" ஆபீஸ் பார்க்கிங்கில் வைத்து பெண் கொலை.. பட்டப்பகலில் சக ஊழியர் வெறிச்செயல்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
Embed widget