மேலும் அறிய

Yogi Babu on Dha Dha Event: ‘இந்த மொகரைக்கு 40 சீனு..’ விழாவிற்கு வரமறுத்த யோகிபாபு.. மேடையில் அவமானப்படுத்திய படக்குழு!

இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வராத காரணத்தால் யோகிபாபுவை தாதா படக்குழு மற்றும் தயாரிப்பாளார்கள் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

கின்னஸ் கிஷோர் இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் தா தா. இந்தப்படத்தில் யோகிபாபு, நித்தின் சத்யா, மனோ பாலா, சிங்கமுத்து, நாசர், ரவிதுரை உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

இந்த விழாவிற்கு படக்குழு சார்பில் யோகிபாபுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது யோகி பாபு நான் படத்தில் "நாற்பது சீனா நடித்திருக்கிறேன்.. நாலு சீன்தானே நடித்திருக்கிறேன்" என்று கூறி விழாவுக்கு வர மறுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விழாவிற்கு வருகை தந்த தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் யோகிபாபுவை கடுமையாக சாடினர். 

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் டிவி லொல்லுசபா மனோகர் பேசும் போது, “ நாலு சீனோ, 40 சீனோ  அது இங்க முக்கியமில்ல. நாலு சீனு நடிச்சாலும் மக்கள் மனதில் நிற்க வேண்டும். அவர்கள் நம்மை பாராட்ட வேண்டும். நான் விஜயுடன் வேலாயுதம் படத்தில் நடித்தேன். அதில் என்னுடைய கேரக்டர் பஜன்லால் சேட்.அந்தப்படத்தில் விஜய் என்னை சீன் முழுக்கவே பஜன் லால் சேட் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அப்படி இருக்கும் போது நான் ஒரு சீன் என்று சொல்ல கூடாது. 

எல்லா சீனும் நான் வந்திருக்கிறேன். அவ்வளவு பெரிய ஹீரோ வாயில் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கிறது. சூழ்நிலை இப்படி இருக்கும் போது நீ எப்படி நிர்ணயிக்கலாம் நாலு சீனா.. நாற்பது சீனா என்பதை.. நீ அந்த வார்த்தையை சொன்னால் என்ன ஆகும் அப்படியென்றால், அந்தப்படத்தில் நடிக்கிற லைட் மேன் தொடங்கி தயாரிப்பாளார் வரை அனைவரும் நஷ்டம் அடைவர். அதனால் நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.” என்று பேசினார். 

இவரை போல படத்தின் இயக்குநர் கின்னஸ் கிஷோர், தயாரிப்பாளர் JSK சதீஷ்குமார் உள்ளிட்ட பலரும் யோகிபாபுவை கண்டித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget