Surya 40 | பொள்ளாச்சி சம்பவம் படமாகிறது; சூர்யா40 கதை இது தானா!
இயக்குநர் பாண்டியராஜ் நடிகர் சூர்யாவின் 40வது படத்தை இயக்குகிறார் என்பது பலரும் அறிந்ததே.
சூர்யாவின் D 40 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் ஆரம்பத்தில் திருநெல்வேலி, பொள்ளாச்சி மற்றும் இதர இடங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது, ஆனால் அதன் பிறகு கொரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் . மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் .
#Suriya40 update
— Pandiraj (@pandiraj_dir) June 7, 2021
Dear #AnbaanaFans
35% படம் முடிஞ்சுருக்கு .
எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு . அடுத்த schedule Lockdown முடிஞ்சதும் start பண்ண வேண்டியதுதான் Our team Ready .
Title Mass ah ,
Pre Anoucement ஓட வரும் . July வரை time kodunga plz 🤗🙏 pic.twitter.com/YssRk5tvKu
தற்போது அந்த திரைப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் சண்டை கட்சி ஒன்றில் 100க்கு மேற்ப்பட்ட கலைஞர்களை வைத்து எடுக்க திட்டமிட்டு இருந்த படக்குழு கொரோனா காரணமாக அந்த காட்சியின் படப்பிடிப்பை தள்ளி வைத்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் மீண்டும் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. தனுஷ் நடிப்பில் உருவாகும் தனுஷ் 43 படக்குழுவும் தனது படப்பிடிப்பை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சியில் சூர்யா 40 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சூர்யா 40 படத்தின் கதை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த படமாக இது இருக்கும் என்ற யுகங்கள் தற்போது இணையத்தில் வலம்வருகின்றது. அண்மையில் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து சித்தரவதை செய்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் அந்த கதையை மையமாக வைத்து தவறு செய்தவர்களை பழிவாங்கும் நாயகனாக சூர்யா களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஆனால் இதுகுறித்து படக்குழு எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 40, பெரிய அளவில் நடிகர் பட்டாளம் உள்ள படம் என்பதால் கொரோனா பரவல் அதிகம் உள்ள இந்த நேரத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து படப்பிடிப்பு நடக்கவுள்ளது. மேலும் படப்பிடிப்புக்கு வரும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது. சென்னையில் மட்டும் நேற்று கொரோனா வைரசால் 350 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர பிற 36 மாவட்டங்களில் 5,405 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்றைய நிலவரப்படி, கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1343 ஆக அதிகரித்துள்ளது.