வெளியானது "கொலை" ட்ரைலர்... அசத்திய விஜய் ஆண்டனி!
Kolai Tailer update: படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் ட்ரைலர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
"Kolai" movie trailer release update : "கொலை" ட்ரைலர் அறிவிப்பு வந்துவிட்டது... எப்போ... யாரு... வெளியிடப்போறாங்க தெரியுமா?
விஜய் ஆண்டனி நடிக்கும் "கொலை" திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு வெகு நாட்களாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. அது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கிரைம் திரில்லர்:
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் மற்றும் டேபிள் ப்ராஃபிட் நிறுவனம் இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் "கொலை". இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள இப்படம் ஒரு கிரைம் திரில்லர் திரைப்படம் என்பதால் இதற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. 2013ம் ஆண்டு வெளியான "விடியும் முன்" எனும் த்ரில்லர் படத்தை இயக்கியவர் பாலாஜிகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
டூயட் பாட இரண்டு ஹீரோயின்கள்:
விஜய் ஆண்டனி ஜோடியாக ரித்திகா சிங் மற்றும் மீனாட்சி சவுத்ரி என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மேலும் ராதிகா சரத்குமார், அர்ஜுன் சிதம்பரம், முரளி சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ட்ரைலர் அறிவிப்பு வந்தது :
விஜய் ஆண்டனி நடிக்கும் "கொலை" திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார் க்ரீஷ் கோபாலகிருஷ்ணன். இப்படத்தின் தயாரிப்பு பணிகளில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழுவினர். "கொலை" படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் அது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் "கொலை" படத்தின் ட்ரைலரை வெளியிட்டார்.
#KOLAI trailer will be launched by the rock star @anirudhofficial tomorrow at 6️⃣ PM🔥 #Staytuned #KolaiTrailer@vijayantony @DirBalajiKumar @ritika_offl @Meenakshiioffl @FvInfiniti @lotuspictures1 @bKamalBohra @Dhananjayang @pradeepfab @siddshankar_ @Panbohra @DoneChannel1 pic.twitter.com/iGsggVMnPH
— 𝙆𝙤𝙡𝙡𝙮𝙬𝙤𝙤𝙙 𝙪𝙥𝙙𝙖𝙩𝙚𝙨 (@KollyUpdates) August 14, 2022
ரசிகர்கள் விரும்பும் கிரைம் திரில்லர் படங்கள் :
பொதுவாகவே திரில்லர் படம் என்றால் அனைத்து வயதில் உள்ளவர்களும் ஆர்வமாக இருப்பார்கள். அதிலும் கிரைம் திரில்லர் என்றால் அவர்களின் ஆர்வம் அலாதியாக இருக்கும். விஜய் ஆண்டனி திரைப்படங்கள் மற்ற படங்களை காட்டிலும் சற்று வித்தியாசமாகவே இருக்கும் என்பதாலும் அவரின் இந்த "கொலை" திரைப்படம் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது எனலாம்.