வீடியோகாலுக்கு ரூ.15ஆயிரம்.. போட்டோவுக்கு ரூ.2ஆயிரம்.. கிரணின் கிறங்கடிக்கும் செயலி!
நடிகை கிரண் என்றாலே இரண்டு படங்கள் மனதில் ஃப்ளாஷ் ஆகிச் செல்லும். ஒன்று ஜெமினி இன்னொன்று வின்னர். ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் கிரண்.
நடிகை கிரண் என்றாலே இரண்டு படங்கள் மனதில் ஃப்ளாஷ் ஆகிச் செல்லும். ஒன்று ஜெமினி இன்னொன்று வின்னர். ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் கிரண். இவரது சொந்த ஊர் ராஜஸ்தான். ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
அவரது அறிமுகக் காட்சியில் இங்கு யாருக்காவது தமிழ் தெரியுமா என்று விக்ரம் கேட்க கையை உயர்த்திக் கொண்டு முகத்திரையில் வழியாக மின்னிக் கொண்டு வருவார் கிரண். அப்போது கிறங்கி விழுந்தவர் படத்தின் நாயகன் விக்ரம் மட்டுமல்ல தமிழ்நாட்டு இளைஞர்களும் தான். உதட்டு மேல் ஒரு மச்சம். பளிச்சென நிறம். ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் ஒரு தேகம் என எல்லோரையும் கட்டிப் போட்டார். அப்புறம் என்ன அடுத்தடுத்து கோலிவுட் வாய்ப்புகள் வந்தன.
அஜித்துடன் வில்லன் படத்தில் நாயகியாக வலம் வந்தார். வின்னர், தென்னவன், அன்பே சிவம் என்று அடித்து தூள் கிளப்பினார். அன்பே சிவம் படத்தில் கமலுடன் ரொமான்ஸிலும் சரி எமோஷன் காட்சிகளிலும் சரி நன்றாக நடித்து வெறும் கவர்ச்சி மட்டுமல்ல நான் என்று உணர வைத்தார். கமலுடன் அவர் பாடும் பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் பாடலில் கமல் சொல்லும் பூ, வானம், தீ என எல்லா அழகையும் தன்னுள் அடக்கியவர் போல் இருப்பார். விஷாலின் திமிரு படத்தில் ஒரு குத்துப் பாடலில் ஆடியிருப்பார். மானாமதுரை குதிரை ஒன்னு கலக்குதடா என்ற பாடலில் குத்தாட்டம் போட்டிருப்பார் கிரண். அந்தப் பாடல் கிரண் ரசிகர்களுக்கு இன்றுவரை போதை சாங் தான்.
ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை.. அவரால் நீண்ட காலம் தமிழில் கோலோச்ச முடியவில்லை. கிளாமரில் தாராளம் என்பதால் கோலிவுட்டில் இருந்து அப்படியே டோலிவுட்டுக்கு தாவினார். அங்கு சில காலம் தாக்குப்பிடித்தார். அப்புறம் அப்படியே இந்திப் படங்களில் தலைகாட்டினார். பின்னர் குணச்சித்திர நடிகை, வில்லி என வாய்ப்புகளை வாங்கி நடித்தார். ஆனால் ஒருகட்டத்தில் எல்லா திரைகளுமே கதவை சாத்த, அவர் ரொம்பவே நொந்து போய்விட்டார்.
கிரணின் கிறங்கடிக்கும் செயலி:
இந்நிலையில் தான் கிரண் ஒரு செயலியை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த செயலிக்கு கிரண் தனது பெயரையே சூட்டியுள்ளார். கி..கி...கி.. கிரண்.. சொல்வதற்கே கிக்காகத் தானே இருக்கிறது. அதனால் தான் அந்தப் பெயரையே சூட்டிவிட்டார் போலும். அந்த செல்போன் செயலியில், தன்னுடன் ஆடியோவில் பேச, வீடியோ காலில் பேச, தனது கவர்ச்சி படங்களை நேரடியாக வாடிக்கையாளரின் செல்போனுக்கு அனுப்பி வைக்க என பல்வேறு சேவைகளுக்கு தனித்தனியாக கட்டண விவரமும் குறிப்பிடப்பட்டு இருக்கிறார் கிரண். 10 நிமிட வீடியோகாலுக்கு ரூ.15ஆயிரம், இன்பாக்ஸில் ஹாட் போட்டோவை தட்டிவிட வேண்டுமென்றால் ரூ.2ஆயிரம், கிரணை நேரடியாக சந்திக்க வேண்டுமென்றால் ரூ.1.5லட்சம் என பல கட்டண விவரங்களை வைத்துள்ளாராம் கிரண்.
இந்த செயலியை பயன்படுத்தவே வாடிக்கையாளர்கள் ரூ.49 கட்டணம் கட்டவேண்டும். இந்த செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
படவாய்ப்புகள் முற்றிலுமாக நின்றுபோகவே சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தினார் கிரண். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்த ஹாட் பிக்சர்கள் லைக்ஸை அள்ள ஏன் அதையே லாபகரமான தொழிலாக மாற்றக் கூடாது என யோசித்த கிரண் தன் பெயரிலேயே ஆப்பை தொடங்கிவிட்டார் எனக் கூறுகிறது விவரவமறிந்த வட்டாரம். ஆனால், அந்த ஆப் ஆபாசமாக உள்ளது. இச்சையைத் தூண்டுகிறது. சட்டவிரோதமானது. அதைத் தடை செய்ய வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. கிரண் ஆப்புக்கு விரைவில் ஆப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது.