Kiccha Sudeep: 9 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநராக களமிறங்கும் கிச்சா சுதீப்; ஷூட்டிங் எப்போது? வெளியான அப்டேட்!
Kiccha Sudeep: ’நான் ஈ’ புகழ் கிச்சா சுதீப் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநராகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது.
’நான் ஈ’ புகழ் கிச்சா சுதீப் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநராகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது.
’KK - "God Forgives, I don't" - King Kichcha’ -கிங் கிச்சா என்ற பெயரில் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி கதநாயகனான கிச்சா சுதீப் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடத்து வருகிறார். தமிழில் ‘நான் ஈ’ படத்தின் மூலம் பிரபலமானவர்.
’கடவுள் மன்னிப்பார்; நான் மன்னிக்க மாட்டேன்’ கிங் கிச்சா என்ற டேக்லைன் உடன் புதிய திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை கே.ஜி.ஆர். ஸ்டூடியோ, கிச்சா கிரியேசன்ஸ் சார்பில் கார்த்திக் கவுடா, யோகி ஜி ராஜ் இணைந்து தயாரிக்கின்றனர். இது கிச்சா சுதீப் 50-வது பிறந்தாளை முன்னிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை கிச்சா சுதீப் பிறந்தநாள் - ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர்.
எனது ஆட்டோகிராப், # 73, சாந்தி நிவாசா, வீர மதகரி,வெறும் மாத் மாதல்லி,கெம்பேகவுடா, மாணிக்யா ஆகிய ஆறு படங்களை இயக்கியுள்ளார். 9 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கத்தில் திரைப்படம் வெளியாகும் என்ற ஆவலில் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘விக்ராந்த் ரோணா’ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப்படத்தைத் தொடர்ந்து கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தை தாணு தயாரிக்கிறார். கிச்சா சுதீப்பின் 46வது படமாக உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ விடியோ அண்மையில் வெளியானது. வி கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.தானு மற்றும் கிச்சா கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை விஜய் கார்த்திகேயா இயக்குகிறார்.இப்படத்திற்கு காந்தாரா புகழ் இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.