KGF 3 Movie : வருகிறதா KGF3? ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிட்ட கேஜிஎப் 2 க்ளைமேக்ஸ்! ட்விட்டரில் பரபர!
கேஜிஎப் 2 திரைப்படத்தை தொடர்ந்து கேஜிஎப் 3 திரைப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் அனைத்து மொழிகளிலும் சூப்பர் டூப்பர் வெற்றியை பதிவு செய்தது. கே.ஜி.எஃப் திரைப்பத்தின் முதல் பாகம் அடுத்த பாகத்தின் தொடர்ச்சியோடு முடிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அடுத்த பாகத்திற்காக முழு வீச்சில் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் கொரோனா காலக்கட்டத்தால் படம் திட்டமிட்டபடி வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தமிழ் புத்தாண்டான இன்று ( ஏப்ரல் 14 ஆம் தேதி) வெளியாகியுள்ளது.
இன்று கேஜிஎப் படம் வெளியானது முதல் படத்திற்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சிறிது கூட எங்கேயும் படம் போர் அடிக்காமல் முழுக்க முழுக்க படம் விறுவிறுப்பாக செல்கிறது என்றும், படம் சரியான தரம் என்றும் சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கேஜிஎப் 2 திரைப்படத்தை தொடர்ந்து கேஜிஎப் 3 திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு தனது கேஜிஎப் 2 படத்தின் இறுதி கார்டில் ஒரு ஐடியா கொடுத்திருத்திருக்கிறார்கள். இதன் காரணமாக யஷ் மற்றும் கேஜிஎப் திரைப்பட ரசிகர்கள் ட்விட்டரில் KGF3 என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ட்விட்டர் ட்ரெண்ட் :
#KGFChapter1 - Pan South film#KGFChapter2 - Pan India film#KGFChapter3 - Pan World film
— OTT Trends ♻️ (@OTT_Army) April 14, 2022
Bring it on! Soon in worldwide 💥#KGF2 #PrashanthNeel#Yash #SanjayDutt #KGFreview#KGF2onApr14 #Salaarglimpse #Salaar #Prabhas #YashBOSS #KGF3 #KGFChapter2review #KGF2FDFS pic.twitter.com/oX77FZ5QCv
#KGFChapter2 #KGF2 - Second half is 🔥🔥. International making with Indian sensibilities. @TheNameIsYash is also all set to go International with #KGF3! Superb stuff from @prashanth_neel , box office records to be rewritten 👍👍💪
— Rajasekar (@sekartweets) April 14, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்