Keerthi Suresh | உன் இதயம் தாங்க முடியாத அளவுக்கு அன்பைச் சுமக்கிறது - கீர்த்தி சுரேஷின் எமோஷ்னல் போஸ்ட்
தலைப்பை வாசித்தவுடன்.. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மாதிரி எதே..செல்லப்பிள்ளையா!? என்று புருவங்களை உயர்த்தாதீர்கள். கீர்த்தி சுரேஷ் அவரது வளர்ப்பு நாயை பிள்ளையாகவே பாவிக்கிறார்.
செல்லப் பிள்ளையுடன் 3-வது பிறந்தநாளைக் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்! தலைப்பை வாசித்தவுடன்.. ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மாதிரி எதே..செல்லப்பிள்ளையா!? என்று புருவங்களை உயர்த்தாதீர்கள். கீர்த்தி சுரேஷ் அவரது வளர்ப்பு நாயை பிள்ளையாகவே பாவிக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் தனது வளர்ப்பு நாயின் 3வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். உன் மேல ஒரு கண்ணு என்று ரஜினி முருகனில் சற்றே பூசியதுபோல் உடல்வாகுடன் இருந்த கீர்த்தி சுரேஷ் இப்போது சைஸ் ஜீரோ ரேஞ்சுக்கு மெலிந்து அட இதுவும் நல்லாத்தான்யா இருக்கு என்று ரசிகர்களின் சபாஷைப் பெற்றுள்ளார்.
ஃபேஸ்புக், இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படத்தைப் பகிர்ந்து லைக்குகளை அள்ளிக் கொள்வார் கீர்த்தி.
கீர்த்தியின் ஓய்வு நேரம் என்றால் அதில் நைக் நிச்சயம் இருப்பான். அட யாருப்பா அந்த நைக் என பொறாமைப் படுபவர்களுக்கு அவர் கீர்த்தியின் செல்ல நாய்க்குட்டி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஷிட்சூ என்றொரு வெளிநாட்டு நாய் இருக்கிறது. இந்த வகை நாய்கள் பார்ப்பதற்கு புஸ்புஸ் முடியுடன் அழகாகக் காட்சியளிக்கும். குட்டியாக செல்லம்போல் இருக்கும் ஷிட்சு நாயை எடுத்துக் கொஞ்சாமல் கடந்து சென்றுவிட முடியாது. அப்படிப்பட்ட வகையைச் சேர்ந்த நைக்கை கீர்த்தி 3 வருடங்களாக வளர்க்கிறார். நைக்குக்கு அண்மையில் 3-வது பிறந்தநாள் வந்தது. நைக்கின் அம்மா என்று தான் கீர்த்தி தன்னை பெருமையாக அழைத்துக் கொள்கிறார்.
பிறந்தநாளைக் கொண்டாடிய கீர்த்தி, "எனது மகனுக்கு இன்று 3 வயது. எல்லோரும் நாய்கள் உங்களை நீங்கள் நேசிப்பதை விட அதிகமாக நேசிக்கும் என்று சொல்வார்கள். அதை இந்த மூன்றாண்டுகளில் நான் நன்றாகவே உணர்ந்துவிட்டேன். நைக் உன்னுடைய குட்டி இதயம், தாங்க முடியாத அளவுக்கு அன்பைச் சுமக்கிறது. வீட்டுக்கு யார் வந்தாலும் உன்னால் கவரப்படுகின்றனர். நீ இங்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் எனக்கு நீ இன்னமும் ஒரு பப்பிதான் நைக். இன்று மட்டுமல்ல என்றுமே நீ பப்பிதான் நைக் " என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நிறைய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் நடிகைகள் நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கிறது. நடிகை அமலா பால் இரண்டு பெர்ஷியன் பூனை, ஒரு நாய் வளர்க்கிறார். நடிகை சமந்தாவும் கீர்த்தியைப் போல் ஷிட்சு வகை நாயை வளர்க்கிறார். நடிகை தமன்னா லகோட்டோ ரொமோனோலா என்ற வகையைச் சேர்ந்த நாயை செல்லமாக வளர்க்கிறார். திரையுலகப் பிரபலங்கள் பலரும் பெரும்பாலும் நாயையே செல்லப் பிராணியாக வளர்க்கின்றனர்.