Star Box Office : பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் கவினின் ஸ்டார்...முதல் நாள் வசூல் நிலவரம் இதோ
ஸ்டார் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரங்களைப் பார்க்கலாம்
ஸ்டார்
இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் (Star Movie) படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதிதி போங்ஹர், ப்ரீத்தி முகுந்தன், லால், கீதா கைலாசம் என பலரும் நடித்துள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சிறு வயது முதலே நடிப்பின் மீது தீராக்காதல் கொண்ட சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன், நடிப்பில் அவன் சாதிக்க கிடைத்த ஒரு முக்கியமான வாய்ப்பின்போது சந்திக்கும் விபத்து அவன் வாழ்வை எப்படி திருப்பி போடுகிறது?
அந்த விபத்தில் இருந்து மீண்டு அவன் சினிமாவில் நடிகனாக , ஸ்டாராக கோலாச்சினானா? என்பதே படத்தின் கதை.
கனா காணும் காலங்கள் மற்றும் சரவணன் மீனாட்சி போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்த கவினின் ஸ்டார் படத்திற்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது . கவினின் நடிப்பு , யுவனின் இசை மற்றும் இளன் எழுத்தில் உணர்வுப்பூர்வமான காட்சிகள் என முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயினராக வெளியாகியுள்ளது ஸ்டார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் ஸ்டார் படத்தை பாராட்டி வருகிறார்கள். மேலும் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில் ஸ்டார் படம் பெரிய வெற்றியை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கலாம். இப்படியான நிலையில் ஸ்டார் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன
ஸ்டார் முதல் நாள் வசூல்
#STARMovie had an excellent Day-1 🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) May 11, 2024
(26K+ Pre sales & 80K+ Day1) Tickets recorded in BMS Alone👌#Kavin has now become a minimum Guarantee #STAR🌟 pic.twitter.com/Ma5dL8GGqU
முதல் நாளில் ஸ்டார் இந்தியளவில் 2.70 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. முன்பதிவுகள் மூலமாக 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்களும் திரையரங்குகளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்களும் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கவினின் சொந்த ஊரான திருச்சியில் திரையரங்குகளில் 95 சதவீதம் டிக்கெட் விற்பனையாகியுள்ளன.
திருச்சியை அடுத்து பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் அதிகளவில் டிக்கெட் விற்பனை நடந்துள்ளது. அடுத்த இரண்டு விடுமுறை நாட்களுக்கான டிக்கெட்கள் படுவேகமாக முன்பதிவு நடைபெற்று வருகிறது.
அர்ஜூன் தாசின் ரசவாதி , கிங்டம் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ் , ஸ்ரீகாந்த் ஆகிய மற்றப் படங்களைக் காட்டிலும் தமிழகத்தைப் பொறுத்தவரை ஸ்டார் படத்திற்கே கூடுதல் வரவேற்பு கிடைத்துள்ளது.