Katrina kaif: 17 வயதில் பாலிவுட் என்ட்ரி.. உண்மையா இருந்திருக்கேன்.. பர்சனல் பக்கங்களை ஷேர் செய்த கத்ரீனா கைஃப்!
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைஃப் தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைஃப் தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.
ஏராளமான ரசிகர்களை கவர்ந்த கத்ரீனா கைஃப்:
கத்ரீனா கைஃப் சினிமாவில் நுழைந்த இந்த 20 வருடங்களில் ஷாருக்கான், அக்ஷய் குமார், அமீர்கான், சல்மான் கான் என அனைத்து முன்னணி பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்து விட்டார். அவரின் திறமையான நடிப்பிற்கு மட்டுமின்றி சிறந்த உடலமைப்பு மற்றும் அவரின் ஆளுமை திறன் இவற்றையும் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
நான் எனக்கு உண்மையாக இருக்கிறேன் :
கத்ரீனா கைஃப் ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் பாதுகாப்பாக நடத்தி வருகிறார். இது குறித்து ஒரு நேர்காணலில் அவர் பேசுகையில், “சினிமா துறையில் இருப்பதால் பொதுமக்களின் பார்வை நிச்சயமாக எனது வாழ்க்கை பயணத்தின் மீது இருக்கும். எனக்கு நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன். எந்த ஒரு விஷயமானாலும் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் அதை எந்த கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கிறார்கள் என்பதை யூகிப்பது கடினம்.
நான் என்னுடைய கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமே பார்க்க முடியும். எனவே நான் என்னுடைய வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றத்தையும் காணவில்லை. எனக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறன். எனது வாழ்க்கை பல வளர்ச்சிகளை கண்டுள்ளது. அது எனக்கு பல அனுபவங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை நான் செய்கிறேன்.
என்னுடைய 17 வயதில் நான் சினிமா துறைக்குள் நுழைந்தேன். பல வருடங்களை கடந்தும் மக்களின் பார்வை என் மீது இருந்துள்ளது. அது ஹிட் படங்களாக இருந்தாலும் சரி தோல்வி படங்களாக இருந்தாலும் ரசிகர்கள் என்னுடைய பயணத்தில் கலந்தே இருப்பதை நான் அற்புதமாக உணர்கிறேன்.
View this post on Instagram
கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் திருமணம் :
39 வயதாகும் நடிகை கத்ரீனா கைஃப் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி ரகசியமாக வைத்திருக்க விரும்புவார். விக்கி கௌஷல் உடனான உறவை சில காலத்திற்கு மறைத்து வைத்து இருந்த கத்ரீனா கடந்த டிசம்பர் 9ம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமணத்தின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சில நிமிடத்திலேயே வைரலானது.
கத்ரீனா கைஃப் தற்போது படு பிஸி :
கத்ரீனா தற்போது மிகவும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். சித்தாந்த் சதுர்வேதி மற்றும் இஷான் கட்டர் இணைந்து நடிக்கும் ஃபோன் பூட் எனும் காமெடி கலந்த திகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சல்மான் கானுடன் டைகர் 3 படத்திலும் நடித்துள்ளார். ப்ரியங்கா சோப்ரா மற்றும் ஆலியா பட் ஆகியோருடன் ஃபர்ஹான் அக்தரின் ஜீ லே ஜராவிலும் நடிக்க உள்ளார். தற்போது ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, வினய் பதக் மற்றும் சஞ்சய் மிஸ்ரா நடிக்கும் மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார் கத்ரீனா கைஃப்.