மேலும் அறிய

KASADATHABARA | ”மறுபடியும் சொல்லுறோம் கசட தபற ஆந்தாலஜி இல்ல” - படக்குழு வெளியிட்ட ஷாக்கிங் அப்டேட்!

5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கசடதபற படம் மூலமாக சிம்புதேவன் களமிறங்கியிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது


சிம்புதேவன் இயக்கத்தில் தற்போது வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் திரைப்படம் ‘கசடதபற’. இந்த திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபுவும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும்  இணைந்து தயாரித்திருக்கிறார்கள். கசடதபற திரைப்படம் ஒரு ஆந்தாலஜி திரைப்படமாக உருவாகியுள்ளது என செய்திகள் வெளியான நிலையில் படக்குழு தற்போது அதனை மறுத்துள்ளனர். இது குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள போஸ்ட் ஒன்றில் “மறுபடியும் மறுபடியும் சொல்லுறோம் இது ஆந்தாலஜி படம் இல்ல” என குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது.  படத்தில் வெங்கட் பிரபு, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், ரெஜினா,பிரியா பவானி ஷங்கர், விஜயலட்சுமி,பிரேம்ஜி  உள்ளிட்ட  மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.  எனவே கசட தபற  ஒரு ஹைப்பர்-லின் படமாக இருக்கலாம். ஹைப்பர் லிங் திரைப்படம் என்பது படத்தில் வெவ்வேறு இடங்களில் பயணிக்கும் கதாபாத்தி்ரங்களை, அதாவாது ஒருவருக்கொருவர் பரீட்சியம் இல்லாதவர்களை கதையுடன் பயணிக்க வைத்து கிளைமேக்ஸ் காட்சியில் ஒன்றிணைப்பது. உதாரணமாக சிம்பு , அனுஷ்கா, பரத் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான வானம் படத்தை கூறலாம்.


KASADATHABARA | ”மறுபடியும் சொல்லுறோம் கசட தபற ஆந்தாலஜி இல்ல” - படக்குழு வெளியிட்ட ஷாக்கிங் அப்டேட்!
எது எப்படியோ இயக்குநர் சிம்புதேவன் தனது சினிமாவில் மீண்டும்  ஒரு புதுமையை புகுத்தியிருப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. முன்னதாக நடிகர் விஜயை வைத்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ‘புலி’ என்ற திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கியிருந்தார். அந்த படம் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும் இன்றளவும் குழந்தைகளின் ஃபேவரெட் லிஸ்டில் அப்படம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் சினிமாவை எடுக்க முயற்சித்த சிம்புதேவனை பலரும் பாராட்டினார்கள். இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கசடதபற படம் மூலமாக சிம்புதேவன் களமிறங்கியிருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.படத்திற்கு வன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சி எஸ், ஷான் ரோல்டன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் இசையமைத்துள்ளார்கள்.

 கசட தபற படத்தின் டீஸர் சமீபத்தி வெளியானது.நம்ம வாழ்க்கைய தீர்மானிக்குறது இரண்டு அறிவியல் கோட்பாடுகள்தான் என கௌதம் வாசுதேவ் மேனன் குரலில் ஒலிக்கிறது இந்த டீசர்.  அடுத்தடுத்த காட்சி விளக்கங்களில் “இங்க மாட்டிக்காம தப்பு பண்றவங்க இருக்கவரைக்கும் தப்பு பண்ணாம மாட்றவங்களும் இருக்கத்தான் செய்வாங்க “ அதேபோல “இந்த ஊர்ல திறமையில்லாத பணக்காரர்களுக்கு கிடக்கிற வாய்ப்பு திறமையான ஏழைகளுக்கு கிடைக்கிறதில்லை” போன்ற வாக்கியங்கள் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தன.
 இந்த படம் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது  இது குறித்த அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி  மற்றும் படக்குழுவினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

Prasanth:
Prasanth:" டாக்டராக வேண்டிய நான் விதியால நடிகன் ஆகிட்டேன்.." மனம் திறந்த டாப் ஸ்டார் பிரசாந்த்
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free Cooking Gas Scheme : ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.! யார் யாருக்கு கிடைக்கும்.? தகுதி என்ன.? சிஎம் விஜய் அதிரடி அறிவிப்பு
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
Minister Ramesh: கதறும் உதயநிதி.. சேகர்பாபு புலனாய்வு புலியா.. வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!
TN Govt: ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
ட்ரான்ஸ்பர் பிடிக்கல, பணிக்கு சேராமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் - சம்பளம் வராது என அரசு வார்னிங்?
TN Weather News: சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Budget EMI Cars: ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான EMI-யில் கிடைக்கும் 10 கார்கள் - விலை, வட்டி, தவணை - முழு விவரம்
ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான EMI-யில் கிடைக்கும் 10 கார்கள் - விலை, வட்டி, தவணை - முழு விவரம்
Gold and silver rate today : மீண்டும் மீண்டுமா.!! இன்றும் உயர்ந்த தங்கம் விலை- ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை என்ன.?
மீண்டும் மீண்டுமா.!! இன்றும் உயர்ந்த தங்கம் விலை- ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை என்ன.?
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
Embed widget