Karthigai Deepam Arthika : 'பணத்துக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்றவ நான் இல்ல... இது சகஜமா?' கொந்தளித்த ஆர்திகா..
அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் வாய்ப்பு, பணம், புகழ் சம்பாதிக்க வேண்டும் என்றால் அப்படிபட்ட ஒரு வாழ்க்கையே தேவையில்லை. அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாழ்பர்கள் இருக்கும் வரையில் இந்த நிலைமை மாறவே மாறாது
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் 'கார்த்திகை தீபம்'. 'செம்பருத்தி' சீரியல் பிரபலம் கார்த்திக் ராஜ் ஜோடியாக கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஆர்த்திகா. இவர்கள் இருவரும் ஏற்கனவே ஜீ தமிழ் பிரீமியரில் நேரடியாக ஒளிபரப்பான 'பிளாக் அண்ட் வொய்ட்' திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
மகனை தேடி நான்கு பெண்கள்:
சமீபத்தில் நடிகை ஆர்த்திகா உடன் நடைபெற்ற நேர்காணலில் ஏராளமான தகவல்களை பகிர்ந்தார். ஆர்த்திக்கா உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். மகன் வேண்டும் என்ற ஆசையால் நான்கு பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு மூன்றாவது மகளாக பிறந்தவர் ஆர்த்திகா. நால்வரையும் மிகவம் துணிச்சலான பெண்களாக வளர்த்துள்ளனர் அவரின் பெற்றோர். ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருந்ததால் குழந்தை பருவத்தில் எந்த ஒரு பாலியல் தொல்லையையும் சந்தித்ததில்லை என கூறியிருந்தார்.
அட்ஜஸ்ட்மென்ட் பண்றதெல்லாம் ஒரு வாழ்க்கையா?
இன்று பல பெண்கள் சினிமா, சீரியல் வாய்ப்புகளுக்காக, பணத்திற்காக, பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்யவும் தயங்குவதில்லை. அது போல ஒரு முறை ஆர்த்திக்காவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் மிகவும் வெளிப்படையாக அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் எனக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால் அப்படி ஒரு வாய்ப்பே தேவையில்லை என முதலிலேயே கூறியுள்ளார்.
அதற்கு பிறகு அப்படி ஒரு அழைப்பு ஆர்த்திகாவிற்கு வரவில்லை என்றார். இந்த உலகில் எத்தனையோ வேலை உள்ளது. நடிகையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை. எல்லா வேலைக்கும் அதற்குரிய மரியாதை உள்ளது. எனவே அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு, பணம், புகழ் சம்பாதிக்க வேண்டும் என்பது போன்ற வாழ்க்கை எனக்கு தேவையே இல்லை என மிகவும் தைரியமாக பேசியிருந்தார் ஆர்த்திகா.
முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் :
”என்னை போல மற்ற பெண்களும் முதலிலேயே இப்படி தப்பான நோக்கத்தில் அணுகுபவர்களிடன் கண்டிப்புடன் தெரிவித்துவிட்டால் இப்போது இருக்கும் இந்த நிலைமை தானாகவே மாறிவிடும். இப்போது அட்ஜஸ்ட்மென்ட் செய்வது சகஜமாகி விட்டதால் நம்மை அணுகும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இந்த பெண்ணும் அப்படிப்பட்டவளாக தான் இருப்பாளோ என்ற எண்ணம் இருக்கும்.
ஆனால் நாம் அதை ஆரம்பத்திலேயே இது போன்ற வாய்ப்புகள் எனக்கு தேவையில்லை. நல்ல வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே அணுகுங்கள் என சொல்லிவிட்டால் அப்படி ஒரு அழைப்பு வராது. முதன் முதலில் என்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள் அதை நான் மறுத்த பிறகு அப்படி ஒரு அழைப்பு அதற்கு பிறகு வரவேயில்லை. ஆனால் ஒரு சிலர் எது வேண்டும் என்றாலும் செய்து முன்னேறலாம் என நினைப்பவர்கள் இருக்கும் வரையில் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அதற்கு ஒரு முடிவே வராது” என்று தெரிவித்துள்ளார்