Karthigai Deepam: ஆனந்துக்கு கல்யாணம்: அபிராமி குடும்பத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்று
அருண் வீட்டை விட்டு வெளியேறுவதாக சொல்ல, கார்த்திக் “ஒரு வாரத்தில் இதை பண்ணது யாருனு கண்டுபிடிக்கிறேன்” என்று அருணை தடுத்து நிறுத்துகிறான்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அருணுக்கும் கார்த்திக்கும் இடையே பிரச்சனை வெடித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, அருண் வீட்டை விட்டு வெளியேறுவதாக சொல்ல, கார்த்திக் “ஒரு வாரத்தில் இதை பண்ணது யாருனு கண்டுபிடிக்கிறேன்” என்று அருணை தடுத்து நிறுத்துகிறான். இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் “நாம பிளான் பண்ண மாதிரியே நடந்துடுச்சி, இதை வச்சே அந்த தீபாவை வெளியே துரத்தணும்” என்று பேசிக் கொள்கின்றனர்.
அதனை தொடர்ந்து தீபா மூலமாக மைதிலிக்கு விஷயம் தெரிய வருகிறது. உடனே அவள் ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு ராஜேஸ்வரியிடம் போனை கொடுக்கச் சொல்லி அவளை கண்டபடி திட்டி போனை வைக்கிறாள். கார்த்திக் அருணை சென்று சந்தித்து “பிரச்னையால் அம்மா சாப்பிடாமல் இருக்காங்க” என்று சொல்ல அருண் அபிராமியை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கிறான்.
மறுப்பக்கம் ஆனந்த் ரியா வீட்டில் இருக்க திடீரென யாரோ கதவை தட்டுகின்றனர். ஆனந்த் கதவைத் திறக்க போலீஸ் நின்று கொண்டிருக்கிறது, “என்ன விஷயம்??” என்று விசாரிக்க “பக்கத்து வீட்டில் ஒரு திருட்டு சம்பவம் நடந்திருக்கு, அதற்காக இன்வெஸ்டிகேஷன் செய்ய வந்திருக்கோம்” என்று சொல்லி நீங்க யார் என்று விசாரிக்க, ஆனந்த் “இவங்க கணவரை விவாகரத்து பண்ணவங்க, நான் இவங்க ப்ரண்ட். பார்த்துட்டு போக வந்தோம்: என்று சொல்ல போலீஸ் ரியாவை ஒரு மாதிரி பார்த்து விட்டு கிளம்பி செல்கின்றனர்.
அதன் பிறகு ரியா “அவங்க பார்வையே சரியில்ல, இதுக்காக தான் நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொன்னேன்” என்று சொல்லி பீல் பண்ண, ஆனந்த் சீக்கிரம் பண்ணிக்கலாம் என்று சொல்கிறான். பிறகு ரியா வெளியே வந்து அந்த போலீசுக்கு பணத்தைக் கொடுத்து நன்றி சொல்ல, இது அனைத்தும் அவளோட செட்டப் என்று தெரிய வருகிறது.
இதனை தொடர்ந்து தீபாவும் அபிராமியும் கோயிலில் விளக்கு போட வருகின்றனர், இந்த நேரம் பார்த்து ரியாவும் அதே கோவிலுக்கு கல்யாணத்துக்கு நாள் குறிக்க வருகிறாள். இப்படியான நிலையில பரபரப்பான கட்டத்தில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Thalapathy Vijay: நேரில் வந்து சர்ப்ரைஸ் தந்த விஜய்: நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட ரோகிணி திரையரங்க ஓனர் மகன்