மேலும் அறிய

Jyothika: கங்குவா தோல்வி; கோயில் கோயிலாக ஏறி இறங்கும் ஜோதிகா! பின்னணி என்ன?

சூர்யாவுக்கு அடுத்தடுத்து படம் தோல்வி அடைந்து வரும் நிலையில், ஜோதிகா கோயில் கோயிலாக ஏறி இறங்கி வருகிறார். தற்போது இதன் பின்னணி குறித்த தகவல் ஒன்று கசிந்துள்ளது.

கங்குவா:

சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா', ரிலீஸ் ஆன முதல் நாளே தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களையே சந்திதது. படம் வெளியாவதற்கு முன்னரே இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் வகையில் 'கங்குவா' இருக்கும் என்று ஓவர் பில்டப் கொடுத்த நிலையில், படம் பலத்த அடிவாங்கியது சூர்யாவை மட்டும் அல்ல ஒட்டுமொத்த படக்குழுவினரையும் அசைத்து பார்த்தது.

மனஉளைச்சலில் சூர்யா:

ஏற்கனவே அடுத்தடுத்த தோல்வி படங்களால் பெருத்த நஷ்டத்தை சந்தித்து கொண்டிருந்த ஞானவேல் ராஜா தலையில் இந்த படமும் இடையை இறக்கியது. ரூ.350 கோடி பட்ஜெட்டுல் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.120 கோடிக்கும் குறைவான வசூலை மட்டுமே பெற்றுள்ளது. 'கங்குவாவின்' மாபெரும் தோல்வியால் சூர்யா தற்போது மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார் என கூறப்படுகிறது.

Jyothika: கங்குவா தோல்வி; கோயில் கோயிலாக ஏறி இறங்கும் ஜோதிகா! பின்னணி என்ன?

சூர்யா கோவில் விசிட்:

கடந்த இரண்டு வருடமாக மும்பையை கதி என இருந்த நிலையில், மன அமைதிக்காக தமிழக கோவில்கள் பக்கம் வர துவங்கியுள்ளார்.  கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சூர்யா - ஜோதிகா இருவரும் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நிலையில் , இன்று காலை ஜோதிகா திருப்பதி திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 

சூர்யா தோல்வி படங்கள்:

ஜோ இப்படி கோவில் கோவிலாக சென்று வர காரணம் சூர்யா தானாம். சிங்கம் 2 படத்துக்கு பின்னர் முட்டி... மோதி பார்த்தும் இவரால், வெற்றிப்படத்தை கொடுக்க முடியாத நிலையில்... குடும்ப ஜோதிடர் கூறிய சில கோவில்களுக்கு தான் இருவரும் சென்று வருவதாக சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இப்படி வெளியாகும் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது சந்தேகமே.

Jyothika: கங்குவா தோல்வி; கோயில் கோயிலாக ஏறி இறங்கும் ஜோதிகா! பின்னணி என்ன?

சூர்யா 44 மற்றும் 45 படங்கள்:

'கங்குவாவை' தொடர்ந்து,  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44ஆவது படம் உருவாகி வருகிறது. விரைவில் இந்தப் படமும் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் தான் இப்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 45ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடைபெற்ற பூஜையில் ஆர்ஜே பாலாஜி, சூர்யா மற்றும் த்ரிஷா உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த நிலையில் தான் சூர்யாவுக்கு அடுத்தடுத்து படங்கள் தோல்வி கொடுத்து வரும் நிலையில் கடவுளில் அருளால் அடுத்த படம் வெற்றிபெறுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget