Vikram Movie Update : ஃப்ளாஷ்பேக் காட்சி.. விக்ரமிற்காக கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் கன்னட நடிகை..!
விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ஷான்வி ஸ்ரீவத்சலா இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில், படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விக்ரம் படம் வரும் ஜூன் 3-ந் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட நடிகை ஷான்வி ஸ்ரீவத்சவா இணைந்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள 10 நிமிடங்கள் வரையிலான பிளாஷ்பேக் காட்சியில் இவர் தொடர்பான காட்சிகள் இடம்பெற உள்ளது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பிரபல நடிகர்களான விஜய் சேதுபதி, பஹத்பாசில் நடித்துள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதியின் காட்சிகளும் பிளாஷ்பேக் காட்சிகளாகதான் படத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் முக்கிய காட்சியாக இடம்பெற்றுள்ள பிளாஷ்பேக் காட்சியில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இவர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிளாஷ்பேக் காட்சியில் கமல்ஹாசனை மிகவும் இளமையாக வி.எப்.எக்ஸ். காட்சிகள் மூலமாக காட்டியுள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நரேன், காளிதாஸ், ஜெயராம், ஷிவானி, விஜே மைனா மற்றும் சந்தானபாரதி ஆகியோர் நடித்துள்ளனர். மாநாடு, கைதி ஆகிய படங்கள் ஒரே இரவில் நடைபெறுவது போல எடுத்த லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை சற்று மாறுபட்டு எடுத்திருந்தார்.
View this post on Instagram
கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வழக்கமான பாணியில் விக்ரம் படத்தை எடுத்திருப்பதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர். விக்ரம் படம் கமல்ஹாசனுக்கு ஒரு கம்பேக் படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்